#JUST IN : திமுக தலைவர் ஸ்டாலினை வீட்டில் சென்று சந்தித்தார் முதல்வர் விஜய்..!!

VIJAY MEETS STALIN
VIJAY MEETS STALIN
Updated on

முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தார். எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜயை வரவேற்றார்.

தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் விஜய் தலைமையிலான முதல் கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் உள்ளிட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இன்றைய தினம் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்ற முதல்வர் விஜய், சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினின் இல்லத்தில், அவரை மதியம் 2.30 மணிக்கு சந்தித்து பேசுகிறார் என தகவல் வெளியானது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக என்று வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மதியம் 3.30 மணிக்கு அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் விஜய் சந்தித்து பேசுகிறார். அவர் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த, விடுதலை சிறுத்தைக்கட்சியின் தலைவர் திருமாவளவனையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேச உள்ளார்.

முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்க நேரில் வருகை தந்த முதல்வர் விஜய்யை வீட்டு வாசலில் வந்து வரவேற்றார் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்.

logo
Kalki Online
kalkionline.com