பெண் குழந்தை வச்சிருக்கீங்களா? உங்களுக்கு தான் இந்த அரசு திட்டம்..!

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டம்
பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 வழங்கும் திட்டம்img credit- tamil.goodreturns.in
Updated on

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என விருதுநகர் மாவட்ட செய்தி குறிப்பில் பயனாளருக்கு உதவும் வகையில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன .

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2026 மற்றும் 27ம் ஆண்டு நிதியாண்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் “முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்” என்பது பெண் சிசுக் கொலையைத் தடுக்கவும், பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யவும் அப்போதைய முதலமைச்சரால் 1992ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நலத்திட்டம்.

இத்திட்டத்தின் பயன்கள் என்ன?

குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் மட்டும் ரூபாய் 50,000 மற்றும் 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூபாய் 25,000 விதம் இரண்டு குழந்தைகளுக்கு மொத்தம் ரூபாய் 50,000 வைப்பு தொகை ரசீது வழங்கப்படும் ..

மூன்று பெண் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் இத்திட்டத்தின் கீழ் ஒரு குழந்தைக்கு ரூபாய் 25, 000 வீதம் மூன்று பெண் குழந்தைகளுக்கு மொத்தம் ரூபாய் 75,000 வைப்புத் தொகை ரசீது வழங்கப்படும்.

இத்திட்டடத்தில் இணைய வேண்டிய தகுதிகள்

  • குடும்பத்தில் ஆண் குழந்தை இருக்கக் கூடாது..

  • குழந்தையின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்குள் இருக்க வேண்டும்.

  • பெற்றோரில் ஒருவர் 10 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்

முதிர்வுத்தொகை எப்போது கிடைக்கும்?

இத்திட்டத்தில் பயன்பெறும் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்த பின்னர் அசல் தொகையுடன் அதற்குரிய வட்டியும் சேர்த்து முழுத் தொகையும் வழங்கப்படும்.

ஒரே ஒரு பெண் குழந்தை திட்டம்

ஆரம்ப வைப்பு தொகை சுமார் ₹50,000 முடிவில் வட்டியுடன் சுமார் ₹1 லட்சம் அல்லது அதற்கு மேல் கிடைக்கலாம் என்றும்,தலா ₹25,000 முதலீடு செய்யப்படும் இரண்டு பெண் குழந்தைகள் திட்ட முடிவில் ஒவ்வொரு குழந்தைக்கும் வட்டியுடன் சுமார் ₹50,000 – ₹60,000 வரை கிடைக்கக்கூடும் என்றும் பல மாவட்ட அறிவிப்புகளில் குறிப்பிடப்படுகிறது.

முதிர்வுத் தொகையை பெறுவதற்கு குழந்தையின் வைப்புத் தொகை ரசீது நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரை அணுகலாம் .

இ-சேவை மையங்களின் மூலம் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

  • குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

  • தாய் அல்லது தந்தையின் வயது சான்றுகள்

  • ஆண்டு வருமானச் சான்றிதழ் (ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்)

  • குடும்ப கட்டுப்பாட்டு சான்றிதழ்

  • ஆண் வாரிசு இன்மைச் சான்றிதழ் பிறப்பிடச் சான்றிதழ்

  • குடும்ப அட்டை மற்றும் உரிய அடையாள அட்டை நகல் ஆகியவை தேவை.

இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலவாளர் மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியராக வளாகம் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் அரசு அதிகாரிகளை அணுகலாம். இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ சுகபுத்திரா இ.ஆ.ப அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

விருதுநகரைத் தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் இருந்தும் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சில முக்கிய விஷயங்கள் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.இத்திட்டம் பழைய திட்டம் என்பதால், புதிய விண்ணப்பங்கள் சில காலமாக குறைக்கப்பட்டிருக்கலாம். மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையங்களில் தற்போது விண்ணப்பங்கள் ஏற்கப்படுகிறதா என்பது இடம் மற்றும் காலத்தைப் பொறுத்து மாறக்கூடும். .

ஏற்கனவே சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான முதிர்வுத் தொகை வழங்கும் செயல்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அளித்த அறிக்கை மூலம் இந்த திட்டம் தொடர்ந்து இருக்கும் என்ற நிலையில் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர்கள் இதை தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம். இத்திட்டம் குறித்த விபரங்களை இதைப்பற்றி அறியாத பெற்றோர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதும் நம் கடமை.

logo
Kalki Online
kalkionline.com