ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்: அமைச்சர் விளக்கம்!

ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்: அமைச்சர் விளக்கம்!
Published on

சென்னை அடுத்த அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 100 சதவீதம் குழந்தை தொழிலாளர்கள் யாரும் பணியாமர்த்தப்படவில்லை என பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் பால்பொருட்கள் தயாரிப்புக்கு தேவையான தொழிலாளர்களை ஹாரிஓம் என்ற தனியார் நிறுவனத்திடம் இருந்து பெற்றுவருகிறது. இந்நிலையில் ஹாரிஓம் நிறுவனம் ஆவின் பால்பொருட்கள் தயாரிப்பதற்கு குழந்தை தொழிலாளர்களை ஈடுப்படுத்தியதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், ஹாரிஓம் நிறுவனம் ஒப்பந்த முறையில் பணியாற்றி குழந்தை தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறி அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இந்நிலையில், அரசு பொதுத் துறை நிறுவனமான ஆவினில் குழந்தை தொழிலாளர்கள் ஈடுப்படுத்தப்பட்ட கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாமக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி அறிக்கை வெளியிட்டனர். இதன்பின்னர், விரைவாக நடவடிக்கையில் இறங்கிய பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அதிகாரிகளை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைpயல் குழந்தைகள் தொழிலாளர்கள் 100 சதவீதம் பணியமர்த்தப்படவில்லை. இது தொடர்பான வீடியோ வெளியான உடனே அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வில் குழந்தை தொழிலாளர்கள் பயிணமர்த்தப்படவில்லை என தெரியவந்தது. குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com