

சீனாவைச் சேர்ந்த கார் நிறுவனமான சிஏஐசி மோட்டார் சீன நிலப்பரப்பில் மிகப்பெரும் அளவிற்கு கார் உற்பத்தியை மேற்கொண்டு விற்பனை செய்துவந்தது. இந்நிறுவனம் தனது அடுத்த கட்ட வளர்ச்சிக்காக ஐரோப்பாவில் தனது முதல் தொழிற்சாலையை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சி ஏ ஐ சி தனது ஐரோப்பிய தொழிற்சாலையில் மின்சார வகை வாகனங்கள் அதிகம் உற்பத்தி செய்வதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கு முன்பு என்.ஜி, ஐ.எம், மேக்சஸ் வகை கார்கள் உற்பத்திக்கும் முக்கியத்துவம் அளித்து வந்தது. இதன் மூலம் எஸ் ஏ ஐ சி நிறுவனம் சீனாவிற்கு வெளியே தன்னுடைய உற்பத்தியை 40 சதவீதம் அதிகரித்து இருந்தது.
அதேநேரம் எஸ் ஏ ஐ சி-க்கு சொந்தமான எம்ஜி மாடல் கார்கள் மிக அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டது. ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் எம்.ஜி வகை கார்கள் விற்பனை செய்யப்பட்டதால் இந்நிறுவனம் அந்த முடிவை எடுத்திருந்தது.2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு இனி எம்.ஜி வகை மாடல் கார்கள் தேவையில்லை என்று முடிவு செய்து, புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் பொருட்டும் எம் ஜி வகை கார்களின் உற்பத்தியை எஸ்ஏஐசி நிறுவனம் முற்றிலும் நிறுத்தி விட்டது. அதன் பிறகு பல புதிய மாடல்களையும் தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வந்தது.
இந்த நிலையில் தற்போது ரஷ்யாவிற்க்கும் உக்ரைனிற்கும் இடையேயான போரை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு பொருளாதார தடை விதித்தன. இதனால் ரஷ்யாவிற்கு சீனா அதிகமான அளவிற்கு மின்சார வகை கார்களை எஸ் ஏ ஐ சி நிறுவனம் மூலம் ஏற்றுமதி செய்து வருகிறது.இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாகனங்களை ரஷ்யாவிற்கு சீனா ஏற்றுமதி செய்திருக்கிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கார் உற்பத்தியில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடம் பிடித்துள்ளது.