சீனாவில் புதுவகை கொரோனா தொற்று வேகமெடுத்துள்ள நிலையில், அந்நாடு கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி, மீண்டும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க உள்ளதாக அறிவித்துள்ளதால், மீண்டும் உலக நாடுகளில் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீனா தனது நாட்டு எல்லைகளை வருகிற ஜனவரி 8-ம் தேதி முதல் திறக்கப் போவதாகவும், வௌிநாட்டு பயணிகளுக்கான விசாக்களை மீண்டும் வழங்க போவதாகவும் சீன அரசு நேற்று அறிவித்தது. சீனாவின் பொருளாதார சரிவை மீட்டெடுக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவியதில் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் உருமாறிய பிஎப் 7 என்ற கொரோனா அதிவேகமாகப் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மீண்டும் புத்தாண்டு முதல் தனது நாட்டின் எல்லைகளை திறக்கப் போவதாக சீன அரசு அறிவித்துள்ளதால் உலகம் முழுவதும் கொரோன பரவல் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.