‘தைவான் விவகாரத்தில் எங்களை விமர்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்‘ சீனா எச்சரிக்கை!

‘தைவான் விவகாரத்தில் எங்களை விமர்சித்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்‘ சீனா எச்சரிக்கை!

தைவான் நாட்டின் அதிபர் சாய் இங் வென், சீனாவின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்காவுக்குச் சென்று வந்ததும் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை சந்தித்ததற்கும் சீனா தனது கடும் எதிர்ப்பை தெரிவித்தது. தைவானை கண்டிக்கும் வகையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு சீன ராணுவம், தைவானைச் சுற்றி மூன்று நாட்கள் பயிற்சியை அறிவித்தது. அதையடுத்து இரு நாட்டு எல்லைகளில் மிகுந்த பதற்றம் நீடித்தது. சீனாவைக் கண்டித்து தைவான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதை கடுமையாக விமர்சனம் செய்தன.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜிங் ஹாங் கூறும்போது, “சமீப காலமாக தைவான் ஜலசந்தி முழுவதும் ஒருதலைபட்சமாகவும், நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்காவும், சீனாவை குற்றம்சாட்டி சில அபத்தமான பேச்சுக்கள் எழுந்தன. இத்தகைய கருத்துகள் சர்வதேச உறவுகள் மற்றும் வரலாற்று நீதி பற்றிய அடிப்படை பொது அறிவுக்கு எதிரானது. இதற்கான விளைவுகள் ஆபத்தானதாக இருக்கும். தைவான் விவகாரத்தில் சீனாவை விமர்சிப்பவர்கள் அதற்கான விளைவுகளை சந்திப்பர். சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை குழிதோண்டிப் புதைக்கும் எந்தச் செயலுக்கும் ஒருபோதும் நாங்கள் பின்வாங்க மாட்டோம். தைவான் விவகாரத்தில் விளையாடுபவர்கள் தங்களையே எரித்துக் கொள்வார்கள்” என்று பேசி உள்ளார்.

கடந்த 1949ல் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு தைவான் தனி நாடானது. ஆனால் சீன அரசு, ‘தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த ஒருபகுதி எனறு கூறி வருகிறது. மேலும், தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற, படை பலத்தையும் பயன்படுத்தத் தயங்க மாட்டோம் எனவும் சீனா கூறி வருகிறது. மேலும், தைவானின் வான் எல்லைக்குள்  சீனவின் போர் விமானங்கள் அடிக்கடி அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com