
சீன அதிபர் ஜீ ஜின்பிங், வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியானதையடுத்து உலக அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை அந்நாட்டு ராணுவம், வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளத்தில் செய்தி வெளியானது. சீனாவில் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவருக்கு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, அதிபர் ஜீ ஜின்பிங்கை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டது.
-இதுகுறித்து சீன மனித உரிமை ஆர்வலரும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான ஜெனிஃபர் ஜெங், ஒரு வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தெரிவித்ததாவது:
செப்டம்பர் 22-ம் தேதி சீன மக்கள் ராணுவத்தின் வாகனங்கள் பெய்ஜிங் நகரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. ஹவுன்லாய் கவுன்டியில் இருந்து ஹெபெய் மாகாணம் உள்ள ஜன்க்ஜியாகெள நகர் வரை சுமார் 80 கிலோ மீட்டர் வாகனங்கள் அணிவகுந்துச் சென்றன.
இதனிடையே, சீன அதிபர் ஜின்பிங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் மக்கள் விடுதலை ராணுவத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ஜின்பிங்கை நீக்கிவிட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன.
-இவ்வாறு அந்த டிவிட்டர் செய்தியில் ஜெனிஃபர் ஜெங் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீனாவில் 60 சதவீத விமானங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இயக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, பாஜக மூத்த அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமி தன் டிவிட்டரில் பதிவிட்டதாவது:
சீன அதிபர் ஸீ ஜின்பிங் உஸ்பெகிஸ்தான் சென்ற சமயத்தில், சீன ராணுவம் அவரை சீன மக்கள் ராணுவத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து வீட்டுக் காவல் அரங்கேறியிருக்கிறது. எனவே, வதந்திகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
-இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தன் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.