சீன உளவுக் கப்பல்
சீன உளவுக் கப்பல்

சீன உளவுக் கப்பல் இந்தியப் பெருங்கடலில் இருந்து வெளியேறியது!

Published on

இலங்கையின் அம்பந்தோட்டா பகுதியில் இலங்கை அரசின் அனுமதியுடன் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்து சீன உளவுக் கப்பல் தற்போது வெளியேறியதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 -இதுகுறித்து இந்தியக் கடற்படை சார்பில் தெரிவிக்கப் பட்டதாவது:

இலங்கை அரசின் அனுமதியுடன் சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் சமீபத்தில் நுழைந்தது. இதன் மூலம் இந்தியாவை வேவு பார்க்கும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடக் கூடும் என்று இந்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் அந்த சீன உளவுக் கப்பல் நேற்று இந்தியப் பெருங்கடலை விட்டு வெளியேறி விட்டது. அந்த உளவுக் கப்பல் வெளியேறினாலும், சீனா சார்பாக இலங்கை அம்பந்தோட்டாவில் நிறுவப்பட்டுள்ள  நீண்ட தூர ஆளில்லா கண்காணிப்பு விமானங்கள் மற்றும் கடல்சார் ரோந்து விமானங்கள் தொடர்ந்து கண்காணிப்பு வேலைகளைச் செய்து வருகிறது. அதை இந்தியாவும் கூர்மையாகக் கன்காணித்து வருகிறது.

 -இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் யாங் வாங்-5 கப்பலை, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டையில் சீனா நிறுத்தியிருந்தது குறிப்பிடத் தக்கது.

logo
Kalki Online
kalkionline.com