சிபில் ஸ்கோர் காரணம்காட்டி கல்விக் கடனில் கெடுபிடி காட்டக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிபில் ஸ்கோர் காரணம்காட்டி கல்விக் கடனில் கெடுபிடி காட்டக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களின் சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கிறது என்கிற காரணத்தால் எந்தவொரு கல்விக்கடன் விண்ணப்பத்தையும் நிராகரிக்கக் கூடாது. கல்விக்கடன் விஷயத்தில் வங்கிகள் மனிதாபிமானத்தோடு நடந்த கொள்ளவேண்டும் என்று கேரளா உயர்நீதிமன்றமும் பீகார் உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கின்றன. வாராக்கடன்களை சமாளிக்க முடியாமல் திணறும் வங்கிகளுக்கு உயர்நீதிமன்ற உத்தரவு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

வங்கிகளின் சேவையில் முக்கியமானது, கல்விக்கடன். எந்தவொரு உயர்படிப்பிற்கும் சென்றாலும் லட்சக்கணக்கில் செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் கல்விக்கடன் சேவையை அளிக்கின்றன. ஒரு சில தனியார் வங்கிகள், கல்விக்கடன் பெறுவதற்க கடுமையான நடைமுறைகளை பின்பற்றிருக்கின்றன.

கல்விக்கடனுக்கு சம்பந்தப்பட்ட மாணவர் மட்டுமல்லாத அவருக்கு கியாரண்டராக இருப்பவர்களின் சிபில் ஸ்கோரையும் சரிபார்த்த பின்னரே வங்கிகள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்கின்றன. ஒருவேளை சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் கல்விக்கடன் அளிக்க மறுத்துவிடுவார்கள். இது குறித்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தபோதுதான் இருவேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் அதிரடி தீர்ப்பை அளித்திருக்கின்றன.

கல்விக்கடனை திரும்ப வசூலிப்பது என்பது சவாலான விஷயமாகிவிட்டதாக வங்கி அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். கல்விக்கடன்கள் பெறும்போது ஆதாரமாக வீடு, சொத்து எதுவும் காட்டடப்படுவதில்லை. வேறெந்த ஆதாரங்களையும் வங்கிகளால் கேட்டுப் பெறமுடிந்ததில்லை. கல்விக்கடன்கள் பெறுபவர்களில் பெரும்பாலானவர்கள் நேர்மையாக அதை திருப்பிச் செலுத்துவிடுகிறார்கள். ஆனால், சிலர் கடனை வாங்கிவிட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள். இதுதான் பெரிய சிக்கல்.

பணத்தை கட்டாமல் நழுவிவிட்ட மாணவர்களின் வயதான பெற்றோர்களை தொடர்பு கொள்ளவும் முடியாது. பெரும்பாலான பெற்றோர்கள் ஓய்வு பெற்றவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கென்று மாத வருமானமும் இருப்பதில்லை. வேறு வழியின்றி பெரும்பாலான கல்விக்கடன்கள், வாராக்கடன் பட்டியலில் இடம்பிடித்துவிடுகின்றன.

மாணவர்கள். பெற்றோர்கள் தவிர கல்விக்கடன் விண்ணப்பத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை கியாரண்டராக காட்டினால் மட்டுமே

கல்விக்கடன் விண்ணப்பத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியும் என்று சில தனியார் வங்கிகள் நிபந்தனைகள் விதிக்கின்றன.

ஒரு சில வங்கிகள் நல்ல வேலைக்கு வாய்ப்புள்ள படிப்புகளை படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே கல்விக்கடனை தருகின்றன. படித்து விட்டு வேலைக்கு செல்லும் நிர்பந்தமுள்ள மாணவர்களுக்கு மட்டுமே கல்விக்கடன் தருகிறார்கள். இல்லாவிட்டால் யாராவது சிபாரிசு செய்தாக வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாணவர் படித்து முடிக்கும் வரை வட்டி விதிக்கப்படக்கூடாது என்பதால் பணம் திரும்ப செலுத்துப்படுமா என்பதை நன்றாக ஆராய்ந்த பின்னர் கடன் அளிக்க வேண்டியிருக்கும். நான்காவது ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர், வேலைக்கு சேர்ந்து பணத்தை திரும்ப கட்டுவாரா என்பதற்கு உத்திரவாதமில்லை. பெரும்பாலான மாணவர்களுக்கு படித்து முடித்தவுடன் வேலை கிடைத்துவிடுவதில்லை.

கல்விக்கடன்களை கட்டாத மாணவர்கள் மீது காவல்துறையின் புகார் அளித்தோ, நீதிமன்றத்தை நாடி உத்தரவு வாங்க வேண்டியிருப்பதால் தனியார் வங்கிகள் அலுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் வெளியாகியுள்ள உயர்நீதிமன்ற உத்தரவு, மாணவர்களுக்கே சாதகமாக இருப்பதால் தனியார் வங்கிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com