தென் ஆப்பிரிக்காவில் விஷவாயு தாக்கி பொதுமக்கள் பலி.

தென் ஆப்பிரிக்காவில் விஷவாயு தாக்கி பொதுமக்கள் பலி.

தென் ஆப்பிரிக்காவில் நைட்ரேட் ஆக்ஸைடு என்ற விஷவாயு கசிந்ததில், 16 நபர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தில் இருக்கும் 'போக்ஸ்பர்க்' நகரின் குடியிருப்பு பகுதிகளில், சுரங்க வேலைகள் நடந்து வருகிறது. அதற்காக அங்கு தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று திடீரென அந்த குடியிருப்பு பகுதிகளில் விஷ வாயுக் கசிவு ஏற்பட்டது. இதை சுவாசித்த 24 பேர் அங்கேயே உயிரிழந்து விட்டதாக சொல்லப்பட்டது. 

இத்தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விஷவாயு கசிவால் மயக்கம் அடைந்திருந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விஷவாயு கசிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில், முறையான உரிமம் இல்லாத சுரங்கத் தொழிலாளர்களை தங்கத்தை சுத்திகரிக்கப் பயன்படுத்தியபோது, எதிர்பாராத விதமாக நைட்ரேட் ஆக்ஸைடுவாயு கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் வாயுக் கசிவினால் மயக்கமடைந்த சிலர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பிறகு, மருத்துவர்களால் உயிர்பிக்க முடிந்தது. இருப்பினும் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் இருக்கின்றனர். அதில் நான்கு பேரின் நிலை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை என்னவென்பது பாதிக்கப்பட்ட பகுதியை முழுமையாகத் தேடிப் பார்த்தால் தான் தெரியும் என அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் விஷவாயுக் கசிவு ஏற்பட்ட பகுதியை சரி செய்வதற்கு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

கடந்த கிறிஸ்துமஸ் ஈவ் அன்றும், இதே பகுதியில் ஒரு பெரிய எரிவாயு டேங்க் வெடித்ததில், 41 பேர் பலியானார்கள். அதாவது, எல்பிஜி எரிவாயுவை ஏற்றிச் சென்ற ட்ரக் பாலத்தின் கீழே சிக்கிக்கொண்டது. அதை வேடிக்கைப் பார்ப்பதற்கு ஏராளமான மக்கள் அங்கு குவிந்திருந்தபோது திடீரென டேங்கர் வெடித்ததில் 41 பேர் சம்பவ இடத்திலேயே மூச்சுத் திணறி பலியானார்கள் என்பதும் குறிப் பிடத்தக்கது. 

மக்களின் அலட்சியப் போக்கினாலே இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்கிறது என போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com