எருது விடும் விழாவில் இளைஞர்கள் மோதல்! ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு!

எருது விடும் விழாவில் இளைஞர்கள் மோதல்! ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து  கடும்  பாதிப்பு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோபசந்திரம் என்னுமிடத்தில் இன்று எருது விடும் விழா நடைப்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது இதில் கலந்துகொள்ள அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான இளைஞர்களோடு , நூற்றுக்கணக்கான காளை மாடுகளும் அழைத்து வரப்பட்டன.

ஓசூர் அருகே எருது விடும் விழா அனுமதி குறித்த விவகாரத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஓசூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார், பொதுமக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த எருது விடும் விழாவிற்கு முறையாக அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறை தரப்பில், விழாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் இளைஞர்கள் மற்றும் போலிசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், காவல்துறையினர் அனைவரையும் கலைந்து போகுமாறு அறிவித்து விரட்டி அடித்தனர்.

பின்னர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய நெடுஞ்சாலையில், எருது விடும் விழாவிற்கு அனுமதிக்க வேண்டும் என கற்களை குவித்து சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டதையடுத்து, தற்போது எருது விடும் விழாவுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து தற்போது எருது விடும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து காளை மாடுகளும், மாடுபிடி வீரர்களும் பரபரப்பாக களத்தில் இறங்கியுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com