பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடக்கம்!

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொடங்குகிறது. மொத்தமாக 9.76 லட்சம் மாணவ மாணவியர்கள் பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ள நிலையில் மொத்தமாக 12,639 பள்ளிகளில் இருந்து சுமார் 9.76 லட்சம் மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுத இருக்கிறார்கள்.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்துள்ளது. அரசு தேர்வு துறையின் அட்டவணையின் படி பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று முதல் தொடங்குகின்றன. 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு மே 17ம் தேதி வெளியிடப்படும். தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு இரண்டு மாதத்துக்கும் தேர்வு முடிவுகளை வெளியிட அரசுத் தேர்வுகள் இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

மாணவர்கள் தேர்வுக்கு நன்கு தயாராகும் வகையில், முக்கிய பாடங்களுக்கு இடையே இடைவெளி கொடுக்கப்பட்டது .ஆங்கில பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், கணித பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும், அறிவியல் பாடத்துக்கு 3 நாட்கள் விடுமுறையும், சமூக அறிவியல் பாடத்துக்கு 2 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.

பத்தாம் வகுப்பு பொது தேர்வுவினை 4.66 லட்சம் மாணவர்களும்,4.55 லட்சம் மாணவியரும் எழுதுகின்றனர். புதுச்சேரியில் மட்டும் 15 ஆயிரத்து 566 பேர்

எழுதுகின்றனர். மேலும் 37 ஆயிரத்து 798 பேர் தனித்தேர்வர்களாக பொதுத் தேர்வினை எதிர்கொள்கின்றன.

மாற்றுப் பாலினத்தவர் 5 பேரும் சிறைவாசிகள் 264 பேரும், 13 ஆயிரத்து 151 மாற்றுத்திறனாளிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் 3986 தேர்வு மையங்களில் எழுதப்படும் இந்த பொதுத் தேர்வை கண்காணிக்க 3100 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தேர்வு அறை கண்காணிப்பு அலுவலர்களாக 46 ஆயிரத்து 870 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவ மாணவியர் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஹால் டிக்கெட்டில் முறையாக அச்சிடப்பட்டுள்ளது. செல்போன் கால்குலேட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை

தேர்வு வரைக்குள் மாணவ மாணவியர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தொடர்பான அனைத்து விதமான புகார்களை தெரிவிக்க அரசு தேர்வுகள் இயக்கத்தில் முழு நேர கட்டுப்பாட்டு அறை என்பது அமைக்கப்பட்டு இருக்கிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைக்கு

9498383081,9498383075 என்ற எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்

logo
Kalki Online
kalkionline.com