10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் துவக்கம்!

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் துவக்கம்!

சென்னையில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. சரியாக இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின.

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடந்தது. அதன் பின்பு வெயில் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனதால் இப்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடக்கிறது.

பள்ளி திறப்பு தாமதமானதால் பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி திறப்பு தாமதமானதால் அவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்த முடியாததால் மாணவ-மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு சென்னையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகள் நேற்றே தொடங்கி நடந்தது.

கோடை வெயில் கடுமையாக இருக்கும் காரணத்தால் 2-வது முறையாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பள்ளிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 12-ந்தேதியும், 1 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 14-ந்தேதியும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி திறந்ததும் வழக்கம் போல் நேரடி வகுப்புகள் தொடங்கும்.

ஆன்லைன் வகுப்புகளுக்காக நேற்று மாலையிலேயே அந்தந்த மாணவ, மாணவிகளுக்கு செல்போனில் அதற்கான லிங்க் அனுப்பப்பட்டது. இன்று காலை 8.30 மணி முதல் பாட வாரியாக வகுப்புகள் தொடங்கின. வீட்டில் இருந்தபடியே 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பாடத்திட்டங்களை ஆன்லைன் மூலம் படித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com