மேலும் ஐந்து மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து!

Modi
Modi
Published on

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலமையிலான மத்திய அமைச்சரவையில் மராத்தி, பெங்காலி உள்ளிட்ட மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகளுக்கு ஏற்கனவே செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது.  செம்மொழியாக மொழிகளைச் சேர்ப்பது வேலை வாய்ப்புகளை உருவாக்கும், குறிப்பாக கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.

மேலும், இந்த மொழிகளின் பண்டைய நூல்களைப் பாதுகாத்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் மயமாக்குதல் சார்ந்தும், மொழிபெயர்ப்பு, வெளியீடு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், “பாரதத்தின் பண்டைய கலாச்சார பாரம்பரியத்தின் பாதுகாவலராக இருந்து வருவது நமது பாரம்பரிய மொழிகள் தான். ஒவ்வொரு சமூகத்தின் வரலாற்று மற்றும் கலாச்சார மைல்கல்லின் சாரத்தையும் உள்ளடக்கியது.”

அறிக்கையின்படி, பெங்காலி மற்றும் மராத்தி தவிர, பாலி, பிராகிருதம் மற்றும் அசாமிய மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையால், ஏற்கனவே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் உடன் சேர்த்து தற்போது இந்திய மொழிகளில் செம்மொழியாக அங்கீகாரம் பெற்ற மொழிகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

கடந்த அக்டோபர் 12, 2004 அன்று ‘செம்மொழிகள்’ என புதிய வகை மொழிகளை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதன்முதலில் கடந்த 2004ம் ஆண்டு தமிழ் மொழிக்குதான் செம்மொழி அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. அதன்பின் சமஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013) மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இறுதியாக ஒடியா மொழிக்கு 2014ஆம் ஆண்டு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
News 5 – (04.10.2024) த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு!
Modi

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கோரி 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா அரசிடமிருந்து ஒரு முன்மொழிவு பெறப்பட்டது. அது மொழியியல் நிபுணர்கள் குழுவுக்கு (எல்இசி - Linguistic Experts Committee ) அனுப்பப்பட்டது. நீண்ட காலமாகவே அது பரிசீலனையில் இருந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தேர்தல் களத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையாக இருந்துவந்த நிலையில் மத்திய அரசு மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்த்தை வழங்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com