ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு ஆடை கேமரா!

ரயில் டிக்கெட் பரிசோதகர்களுக்கு ஆடை கேமரா!
Published on

யில்களில் டிக்கெட் பரிசோதனைகள், பயணிகளிடம் அநாகரிகமாக அல்லது கடுமையாக நடந்து கொள்வதை தடுக்கும் வகையிலும் டிக்கெட் பரிசோதனை நடைமுறையில் வெளிப்படத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையிலும் அவர்களின் ஆடையில் கேமரா பொருத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

முன்னோடித் திட்டமாக மும்பை மண்டல ரயில் டிக்கெட்  பரிசோதகர்களுக்கு இந்த ஆடை கேமராக்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய ரயில்வே சார்பில் 50 ஆடை கேமராக்கள் மும்பை ரயில்வே கோட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.

பயணிகளிடம் அநாகரிகமாக செயல்படும் டிக்கெட் பரிசோதகர்கள், பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் அவர்களுக்கான இந்த ஆடை கேமரா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது டிக்கெட் பரிசோதனையில் பரிசோதகர்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் பயணிகளின் நடவடிக்கை இதன் மூலம் உறுதிப்படுத்தப்படும்.

மும்பையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த முன்னோடி திட்டம் வெற்றியடைந்த உடன் மற்ற பகுதிகளிலும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தலா ரூபாய் ஒன்பதாயிரம் விலை உடைய இந்த ஆடை கேமரா தொடர்ச்சியாக இருபது மணி நேரம் பதிவு செய்யும் திறன் கொண்டதாகும்.

ஆடை கேமராக்கள் முதல்முறையாக பிரிட்டனின் அங்குள்ள போலீசார் ஆடையில் அணிந்து கொள்ளும் வகையில் கடந்து 2005 ஆம் ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டது அதன் பிறகு பல்வேறு நாடுகளில் காவல்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த நவீன கேமரா இந்தியாவிலும் தற்போது பல்வேறு காவல் துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com