சென்னையில் ஒரு 'மினி' நியூயார்க்! - முளைத்தது ₹254 கோடி நிதிநுட்ப கோபுரம்: 7,000 பேருக்கு வேலை..!

cm inaugurates international standard financial technology tower
cm inaugurates international standard financial technology tower source:maalaimalar
Published on

சென்னை நந்தம்பாக்கத்தில் ரூபாய் 249 கோடி மதிப்பில் Tamil Nadu Fintech City திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள((FinTech Tower) நிதி நுட்ப கோபுரத்தை நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையை உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றும் நோக்கில், நந்தம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள அதிநவீன 'நிதிநுட்ப கோபுரம்' (FinTech Tower) நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.நிதி நுட்ப கோபுரம் (Financial Technology Tower / FinTech Tower) என்பது நிதி தொடர்பான அனைத்து சேவைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒன்றாக செயல்படும் ஒரு சிறப்பு அலுவலக வளாகம் அல்லது ஐ.டி. மையம் ஆகும்.

2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த கட்டிடத்திற்கான அடிக்கல் முதல்வர் ஸ்டாலினால் நாட்டப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. 254 கோடி மதிப்பீட்டில், 5.6 லட்சம் சதுர அடி பரப்பளவில் Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) முன்னிலையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய நிதிநுட்ப கோபுரம் (Fintech Tower) (அடுக்குமாடி கட்டிடம்) உலகளாவிய வங்கி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தமிழ்நாட்டின் நிதித்துறையை மேம்படுத்தும் விதமாக செயல்படும் என்று நம்பப்படுகிறது.

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா இது குறித்துக் கூறுகையில்:

  • இந்த நிதிநுட்ப கோபுரம் மூலம் சுமார் 7,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

  • இத்திட்டத்தின் மூலம் ₹1,000 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • சர்வதேச வங்கி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு நகரும்.

நவீன உள்கட்டமைப்புடன் வெள்ளத்தை தாங்கும் வடிவமைப்பு மற்றும் நிதிநுட்ப நிறுவனங்களுக்கான பிரத்யேக வசதிகளுடனும் , முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் இணைந்து இயங்கப்போகும் நிதிநுட்ப நகரம் (Fintech City) திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையை உலகளாவிய நிதி மற்றும் தொழில்நுட்ப மையமாக மாற்றுவது நோக்கமாக உள்ளது சிறப்பு.

வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் போன்றவைகளூடன் மென்பொருள், மொபைல் ஆப்ஸ், ஆன்லைன் பரிவர்த்தனை மற்றும் AI அடிப்படையிலான நிதி சேவைகளை பயன்படுத்தும் இடமே “நிதி நுட்ப கோபுரம்” என்பதால் வேலை வாய்ப்பு அதிகரிப்பு ,டிஜிட்டல் நிதி சேவைகள் வேகமாக வளர்ச்சி, முதலீடு ஈர்ப்பு , மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி போன்ற பல பயன்களை அடையலாம்.

தற்போதைய நிலை:

கட்டடம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்பட்டிருந்தாலும், அங்கு அமைய உள்ள நிறுவனங்களின் உட்புறக் கட்டமைப்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. இதனால் அங்கு இடம்பெறப்போகும் நிறுவனங்களின் இறுதிப் பட்டியல் மற்றும் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com