குடிநீர் வசதி முதல் மெட்ரோ வரை…!! சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு..!

chennai election manifesto
chennai election manifestoimage source:Samayamtamil
Updated on

'சென்னை சூப்பர்-6' திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

முக்கிய அறிவிப்புகள் விபரம் பின்வருமாறு:

* புதிதாக 1,000 மினி பஸ்கள் இயக்கப்படும்.பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ நிலையங்கள், ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் 1,000 புதிய மினி பேருந்துகள் இயக்கப்படும்.

* மெட்ரோ விரிவாக்க பணிகள் 2028க்குள் நிறைவு செய்யப்படும்.

*சென்னையில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக பார்க்கப்படுவது குடிநீர். போதிய மழை பெய்யாமலும், அண்டை மாநிலங்களில் இருந்து போதிய நீர் திறந்து விடப்படாத சூழல்களில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதற்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு ஆர்.ஓ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள், மெட்ரோ குடிநீர் வசதி உள்ள குடியிருப்புகளுக்கு காலமுறைப்படி குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

* சென்னையில் சாலை வசதிகள் மிகவும் முக்கியமானவை. தற்போது பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணபப்டுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

*சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக மாதவரம் பால் பண்ணை - சிறுசேரி சிப்காட் வரையிலான பர்பிள் லைன், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான எல்லோ லைன், மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரையிலான ரெட் லைன் ஆகிய மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை அனைத்தும் வரும் 2028குள் முடிக்கப்படும்.

chennai election manifesto
chennai election manifesto

* சென்னையில் AI, ANIMATION, VISUAL EFFECTS, GAMING, AND IMMERSIVE TECHNOLOGIES-க்கு சிறப்பு மையம் அமைக்கப்படும்.

* உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு, உயர்தரத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, ஆராய்ச்சி மையம், அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

* 20 ஆயிரம் உயர் ஊதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 10 ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

* சென்னையில் தெரு நாய்கள் தொல்லைகள் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்காக கால்நடை மருத்துவர்கள், நாய் பிடிப்பவர்கள் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்கப்படும்.

* தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து விரிவுப்படுத்தப்பட்ட காப்பகங்கள் உருவாக்கப்படும்.

* எண்ணூர் முதல் பூஞ்சேரி வரையிலான சென்னை எல்லைச் சாலை திட்டம் போன்ற 10க்கு மேற்பட்ட முக்கிய திட்டங்கள் 2027க்குள் முடிக்கப்படும்.

* மழை நீர் வடிகால்கள் 2028க்குள் முடிக்கப்படும்.

* பாதாளச் சாக்கடைத் திட்டம் 2027க்குள் முடிக்கப்படும்.

* நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குடியிருப்போர் நல மகளிர் சங்கம் மூலம் அரசு நிதியுதவியுடன் பொது வசதிகள் மேம்படுத்தப்படும்.

* அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் அதி ஒளி தெரு விளக்குகள் அமைக்கப்படும்.

* கலை, இசை, இலக்கிய நிகழ்வுகளுக்கென ஒரு தனித்துவ உலகத்தரப் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com