

தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வழியாக பேசியிருக்கிறார்.
அரசியலமைப்பு சட்டம் 131வது திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தொகுதி மறுவரையறை மசோதாவை கண்டித்து திமுகவினர் கருப்புக்கொடி போராட்டமும் நடத்தினர். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிரான போராட்டத்தை ராகுல் காந்தி வழி நடத்த வேண்டும் என முதலமைச்சர் தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்திருக்கிறார். அத்துடன் நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முழு ஆதரவை வழங்குவார்கள் என ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.