இன்று சென்னை YMCA மைதானத்தில் தொடங்குகிறது 49-வது புத்தகக் கண்காட்சி..!

சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் 49-வது புத்தகக் கண்காட்சி இன்று தொடங்கி வரும் ஜனவரி 21-ம்தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னை புத்தகக் கண்காட்சி
சென்னை புத்தகக் கண்காட்சி
Published on

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சி, இன்று (ஜனவரி 8) தொடங்கி ஜனவரி 21-ம்தேதி வரை மொத்தம் 13 நாட்கள் நடைபெற உள்ளது.

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சியை, இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

வழக்கமாக வார இறுதி நாட்களில் மட்டும் காலை நேரங்களில் திறந்திருந்த புத்தக கண்காட்சி, இந்த முறை அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். கடந்த ஆண்டு 800 அரங்குகள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. புத்தக கண்காட்சியில் முதல்முறையாக பார்வையாளர்களுக்கு இலவவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலவச நுழைவு என்பது புத்தக ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். இதற்கு முன்பு ரூ.10 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஜப்பான் போன்ற போன்ற வெளிநாடுகள் மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் தங்கள் அரங்குகளை அமைத்து பங்கேற்கின்றன. அதுமட்டுமின்றி தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

இதையும் படியுங்கள்:
வாசிப்பின் வாசம் வீசும் புத்தகக் கண்காட்சி!
சென்னை புத்தகக் கண்காட்சி

வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், சிந்தனையாளார்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்படும். அவர்களுக்கு வாசிப்புப் பயிற்சியும் அளிக்கப்படும்.

இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children's Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் 'Queer' பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

புத்தக கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக சுமார் 5 லட்சம் வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், கழிப்பறை வசதிகள், பொதுமக்களுக்கான ஓய்வறை போன்ற வசதிகளும் மேம்படுத்தப்படும் என BAPASI-ன் துணைத் தலைவர் (தமிழ்) நக்கீரன் கோபால் தெரிவித்தார்.

மேலும், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியில் வழங்கப்படவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளுக்கான வெற்றியாளர்கள் பட்டியலை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்துள்ளது.

அதன்படி,

கவிதை - கவிஞர் நா. சுகுமாரன்

சிறுகதை -எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

நாவல் -எழுத்தாளர் ரா.முருகன்

உரைநடை -பேராசிரியர் பாரதிபுத்திரன் (ச.பாலுசாமி)

நாடகம் - கே.எஸ். கருணா பிரசாத்

மொழிபெயர்ப்பு- மொழிபெயர்ப்பாளர் வ.கீதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு விருதும் தலா ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு பல புதிய அனுபவங்கள் காத்திருக்கின்றன. வெளிநாட்டு அரங்குகள், மாநில அரங்குகள் என பலதரப்பட்ட கலாச்சாரங்களையும், இலக்கியங்களையும் ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்களின் புத்தகங்கள் இங்கு கிடைக்கும். இது வாசகர்களுக்கு ஒரு பொக்கிஷமாக அமையும்.

இதையும் படியுங்கள்:
இன்று முதல் சென்னை புத்தகக் கண்காட்சி!
சென்னை புத்தகக் கண்காட்சி

புத்தகக் கண்காட்சி என்பது வெறும் புத்தகங்களை வாங்கும் இடம் மட்டுமல்ல. அது அறிவுப் பரிமாற்றத்திற்கான ஒரு மேடை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com