திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை..!!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on

திமுக நிர்வாகிகளுடன் காணொலி மூலமாக ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து முதலமைச்சர் திமுக நிர்வாகிகளுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முதற்கட்ட பரப்புரையை முதலமைச்சர் நிறைவு செய்துள்ள நிலையில் தற்போது களத்தில் இருக்கக்கூடிய தேர்தல் பணிகள், பிரச்சார வியூகங்கள் குறித்து முதலமைச்சர் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மாவட்டச் செயலாளர்கள், திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், பகுதி, நகர, ஒன்றிய செயலாளர்கள் போன்ற அனைத்து நிர்வாகிகளுடனும், போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்தவர்களும் நிர்வாகிகள்  ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். நாளை மீண்டும் பிரச்சாரத்தை தொடங்க இருக்கும் முதலமைச்சர் தற்பொழுது திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com