எங்களுக்கும் நக்கல் நையாண்டி தெரியும்... சட்டசபையை சிரிக்க வைத்த முதலமைச்சரின் குட்டிக்கதை..!!

"சூட்டிங்ல இருந்து வந்து சிஎம் ஆகல, மக்கள் இதயத்துல இடம் பிடிச்சு வந்தவன்!" - விமர்சனங்களுக்கு 'ரியல்' பதிலடி கொடுத்த விஜய்!
முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17 வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெகவின் புதிய அரசின் முதல் சட்டசபை கூட்டம் 18ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. 19ஆம் தேதி மற்றும் 22 ஆம் தேதிகளில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இந்நிலையில் சட்டசபை நிறைவு நாளான இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து முதலமைச்சர் விஜய் பேசினார்.

முதலமைச்சர் விஜய் செய்த ஆக்சன்:

அப்பொழுது Evils, Evils என்று Devils பேசக்கூடாது என்று கூறி முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த செய்கையை செய்து காட்டி மு க ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த இன்றைய முதலமைச்சர் விஜய் அவர்கள் சட்டசபையில் செய்து காட்டிய ஆக்சன் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

5 நிமிடங்கள் பேசியதற்கே:

கட்சி நிதி என்ற பெயரில் கொள்ளை. மக்கள் பணத்தை தொட மாட்டோம். தொடவும் விடமாட்டோம். மக்கள் பணத்தை தொட்டவர்களை விடவும் மாட்டோம் என்று பேசியதும் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பேசு பேசு என்று சொல்கின்றனர். வெறும் ஐந்து நிமிடங்கள் பேசியதற்கே கொளத்தூர் ஆட்டம் கண்டது. பேசுங்க பேசுங்க என்றால் நான் என்ன பேசுவது.

Vijay political victory
Vijay political victory

மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்:

கொள்கை அளவில் நாம் மத்திய அரசு சார்ந்த கட்சியுடன் நேரெதிராக நிற்பவர்கள் தான். அதற்காக எதற்கெடுத்தாலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்ப மாட்டோம். நமக்கு எப்போதும் தமிழத்தின் வளர்ச்சி மட்டும் தான் முக்கியம். அதற்காக மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். மக்களுக்கோ, நம் ஆதரவு இயக்கங்களுக்கோ இதைப்பற்றிய எந்த சந்தேகமும் வேண்டாம். நாம் யாருடைய டீமும் இல்லை. நாம் Pure-ரான People's Team.

திமுகவினர் வெளிநடப்பு செய்த போதும் முதலமைச்சர் விஜய் ஒரு குட்டி கதை சொல்ல தோன்றுகிறது சொல்லலாமா என்று சபாநாயகரிடம் அனுமதி பெற்று தன்னுடைய பேச்சுக்கு நடுவில் குட்டி ஸ்டோரி ஒன்றைக் கூறினார். ‌

விஜய் கூறிய குட்டிக்கதை:

ஒரு ஊர்ல ஒரு பெரியவர் ரொம்ப வெயில் ஜாஸ்தியாக இருக்கு என்று கண்ணுக்கு மேல் கையை வைத்து சுற்றி முற்றி பார்த்தார். அப்பொழுது கூட இருந்த ஒரு சின்ன பையன் என்ன தேடுறீங்க என்று கேட்கும் போது அந்த பெரியவர் ஒன்னும் இல்ல தம்பி உங்க அப்பா இங்க தான் இருப்பார் என்று சொன்னாங்க அதான் தேடிட்டு இருக்கேன். எங்க உங்க அப்பாவையே காணோம்! எங்களுக்கும் நக்கலா நையாண்டியா சம்பந்தம் சம்பந்தமில்லாத குட்டிக்கதை எல்லாம் பேசத் தெரியும். அந்தக் கதையில அந்தப் பெரியவர் அப்படி சொன்னார் தப்பா எடுத்துக்காதீங்க. அதனால யாரும் இங்க டென்ஷன் ஆக வேண்டாம் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

சூட்டிங்கில் இருந்து நேராக சட்டசபைக்கு வந்து சிஎம் ஆன மாதிரி சிலர் இமேஜ் கிரியேட் பண்ணுகிறார்கள். அவர்கள் பாணியிலேயே பதில் கூறுவதென்றால் அது வெறும் ரீல் தான் ரியல் கிடையாது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களின் இதயத்தில் இடம் பிடித்ததால் தான் சிஎம் ஆனேன் என்று கூறினார்.

சட்டசபை நிறைவு நாளான இன்று முதலமைச்சர் விஜய் பதிலளித்ததைத் தொடர்ந்து தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார். 2026-27 ஆம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக ஜூலை மாதம் தமிழக சட்டசபை மீண்டும் கூட இருக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com