முதலமைச்சர் விஜய்யின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம்?

cm vijay advisors
cm vijay advisorssource:indianexpress
Updated on

முதல்வர் ஜோசப் சி. விஜயின் ஆலோசகர்களாக ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜயின் பொது நிகழ்வுகள், நிர்வாகப் பணிகள் மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான இரண்டு முக்கிய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஜான் ஆரோக்கியசாமி:

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், உலகளாவிய அளவிலும் பல முக்கிய தேர்தல்களில் முன்னணி அரசியல் தலைவர்களுக்குப் பின்னால் இருந்து வெற்றிகரமான உத்திகளை வகுத்துக் கொடுத்த அனுபவம் மிக்கவர் இந்த ஜான் ஆரோக்கியசாமி.

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வரும் ஜான் ஆரோக்கியசாமி, முதல்வர் விஜயின் அரசியல் ஆலோசகராக தமிழக அரசு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கட்சி தொடங்கியதில் இருந்தே அக்கட்சியின் அரசியல் வியூக வகிப்பாளராக செயல்பட்டு வருகிறார். தேர்தல் வியூகம் முதல் அமைச்சரவை தேர்வு முதல் முக்கிய பங்காற்றியுள்ளார். ஒரு புதிய கட்சியை மிகக்குறுகிய காலத்தில் தேர்தலை நோக்கி வழி நடத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இவர் அரசின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள், கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்தல், சட்டமன்ற உத்திகளை வகுப்பது போன்ற முக்கியமான பொறுப்புகளை கவனிப்பார்.

விஷ்ணு ரெட்டி:

விஜயின் நண்பரும் தொழிலதிபருமான விஷ்ணு ரெட்டி முதல்வரின் பொது விவகாரங்களுக்கான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் விஜயின் சிறுவயது நண்பர் என்று கூறப்படுகிறது. இவர் ஆளுநர் மாளிகைக்கு ஆட்சி அமைப்பதற்காக அழைக்க கோரி கடிதம் வழங்கச் சென்றபொழுது கூட விஜயுடன் இருந்தவர். இவரிடம் முதலமைச்சரின் அன்றாட பொது நிகழ்ச்சிகள், அரசு விழாக்கள் மற்றும் மக்கள் சந்திப்புகளை திட்டமிட்டு நேர்த்தியாக ஒருங்கிணைக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் சிறப்பு ஆலோசகர்கள் பதவி வழங்குவதற்கு இணையத்தில் நிறைய எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஏற்கனவே முதல்வர் விஜய்யின் தனிப்பட்ட ஜோதிடரும், தவெக செய்தித் தொடர்பாளருமான ரத்தன் பண்டிட்டை ஆலோசகராக நியமித்ததற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அதன் காரணமாக அந்த நியமனத்தை தமிழக அரசு திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com