

சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற த.வெ.க, கூட்டணி கட்சியின் துணையுடன் ஆட்சியை கைப்பற்றியது.எனினும், தனித்து ஆட்சி அமைக்கும் அறுதிப் பெரும்பான்மை பலமான 118- உறுப்பினா்களின் ஆதரவு இல்லாத நிலையில், காங்கிரஸ், வி.சி.க, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் முதல்வராக விஜய் கடந்த 10-ம் தேதி பதவியேற்றாா்.
இந்நிலையில் த.வெ.க அரசின் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். இதில் பேசிய அனைத்துக் கட்சிகளை சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தவெக கட்சியை ஆதரித்து எதிர்ப்பும் தெரிவித்து தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
முன்னதாகப் பேசிய காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் எம்எல்ஏ பெண்கள் பாதுகாப்புக்காக தவெக அரசு தொடருவதற்கான தீர்மானத்தை முன்மொழிந்து தங்கள் கட்சியின் ஆதரவைத் தெரிவித்தார்.
அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமி பேசிய நிலையில் தொடர்ந்து அதன் சட்டப்பேரவை உறுப்பினரான எஸ்பி வேலுமணி பேசியபோது சட்டசபையில் அவர் பேசுவதற்கு ஏன் அனுமதி தந்தீர்கள் ? என அமளியில் ஈடுபட்ட அதிமுகவின் மற்ற உறுப்பினர்களை சபாநாயகர் சமாதானம் செய்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சியான திமுகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில் சபாநாயகரின் வேண்டுதலின்படி தவெக கட்சி தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன விஜய் அவர்கள் தனக்கு ஆதரவாகவும் எதிர்த்தும் பேசிய உறுப்பினர்களுக்கு நன்றி கூறி பேசி ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்கள் எழுப்பிய கருத்துகளுக்கு விடையளித்தேப் பேசிய உரையிலிருந்து சில துளிகள் ..
தமிழக வெற்றி கழகம் மதச்சார்பற்ற அரசாங்கமாகவே செயல்படும் என்பது உறுதி.இந்நிலையில் த.வெ.க அரசின் மீதான நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தை முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.
முந்தைய அரசு கொண்டு வந்த நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியளிக்கிறேன். கொள்கை தலைவர்களின் எண்ணங்களின் அடிப்படையில் எங்களது அரசு தொடரும்.
ஆதரவு ஆதரிப்பவர்களுக்கான அரசு மட்டுமல்ல எதிர்ப்பவர்கள் அரசு என்பதை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி எதிர்க்கட்சிகளை எதிர்க்கட்சிகாக நினைக்காமல் எங்கள் அரசு செயல்படுவதை பாராட்டிய பிரேமலதா விஜயகாந்த் சொன்ன கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும்.
குதிரை பேரத்தில் இந்த அரசு ஈடுபடவில்லை. இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர குதிரை பேரத்தில் ஈடுபடாது" என்றார்.
பாமக வின் சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டிய விவசாயிகள், இளைஞர்கள் , மகளிர் நலன், மது ஒழிப்பு போன்ற திட்டங்களில் இருந்து விலகாமல் மகளிர் பாதுகாப்பிலிருந்து தவற இம்மியளவும் இடம் தர மாட்டோம் .
தமிழ் நாட்டை ஆண்ட பல்வேறு அரசுகள் இந்த நாட்டு மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி தீட்டிய திட்டங்கள் சமூக நீதிக்கு முன் உதாரணமாக திகழ்ந்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் எங்கள் கட்சியின் கொள்கை தலைவர்களின் எண்ணங்கள் இவற்றை மனதில் கொண்டு எங்கள் ஆட்சி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது சிறுபான்மை மக்களுக்கான அரசு. இந்த அரசு யாரையும் வெறுக்காது. அதிகாரத்திற்காக நாங்கள் அரசுக்கு வரவில்லை. அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் நன்றி" என்றார்.