முதலமைச்சர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

வீடியோ கான்ஃபரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்; வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.
vijay sangeetha
vijay sangeetha image source: filmibeat
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக இருவரும் சேர்ந்து இல்லாமல் தனித்து தான் உள்ளனர். நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இடையிலான விவாகரத்துக்கு, விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சங்கீதா தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். ஏப்ரல் 2021ல் தனது கணவருக்கு மற்றொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதை அறிந்ததாகவும், அது தனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார். விஜய் அந்த உறவை முடித்துக் கொள்வதாக உறுதியளித்தும், தொடர்ந்து அந்த தொடர்பில் இருந்ததால் தமக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். மனக்கசப்புகள் மற்றும் குடும்ப வாழ்க்கையில் தொடர்ந்த புறக்கணிப்பு காரணமாக திருமணம் முற்றிலும் முறிந்து விட்டதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

vijay tvk
vijay tvk

விஜயின் முதல்வர் பதவியேற்பு விழாவிலும் சங்கீதாவோ அவரது மகன் மகளோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் விஜயின் மனைவி சங்கீதா கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். அதில் தமக்கு விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சமும் வேண்டுமென்று கோரியிருந்தார். அத்துடன் நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வசிப்பதற்கான உரிமையும் வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு பிப்ரவரி 26ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராகாமல் அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்பொழுது செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டு, ஒத்தி வைக்கப்பட்டு இன்று ஜூன் 15ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஆன்லைனில் விசாரணைக்கு ஆஜராக கோரிக்கை விடுத்தனர். ஆனால் விவாகரத்து வழக்கில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக முதலமைச்சர் விஜய், சங்கீதா விடுத்த கோரிக்கையை செங்கல்பட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் வீடியோ கான்ஃபரன்ஸ் விசாரணைக்குத் தேவையான இமெயில் முகவரி உள்ளிட்ட ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இன்று விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால் இந்த வழக்கை ஆகஸ்ட் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படியுங்கள்:
முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
vijay sangeetha
logo
Kalki Online
kalkionline.com