
செனையில் மெட்ரோ தொடங்கிய நாள் முதலே கடந்த மாதம் தான் அதிக பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை என்றாலே நமக்கு பல விஷயங்கள் நினைவுக்கு வரும். சென்னையை வெறுக்கதக்க விஷயம் என்று கேட்டாலே பலரும் ட்ராஃபிக் என்று தான் சொல்வார்கள். ட்ராபிக் நாளுக்கு நாள் அதிகரிக்க பலரும் திண்டாடி வருகின்றனர். பயணிகளின் சுமையை குறைக்கவே சென்னையில் மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட சேவைகள் தொடங்கப்பட்டது.
பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் அதிகமானோர் பெரும்பாலும் மின்சார ரயிலையே தேர்ந்தெடுப்பனர். காரணம் அது ரொம்ப விலை குறைவு என்றும், ட்ராஃபிக் இல்லாமல் சீக்கிரம் சென்று விடலாம் என்று தான். மெட்ரோ தொடங்கிய பிறகு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மெட்ரோவில் செல்ல ஆரம்பித்தனர். டிக்கெட் அதிகமாக இருப்பதால் சிலர் மட்டுமே பயணம் செய்தனர்.
ஆனால் தற்போது பேருந்து கட்டணமே வசூலிக்கப்படுவதாலும், நிறைய Benefits உள்ளதாலும் மக்கள் மெட்ரோவை தேர்ந்தெடுக்கின்றனர். தற்போதெல்லாம் மெட்ரோவில்லேயே அதிக கூட்ட நெரிசல் உள்ளது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் மெட்ரோ ரயில்களில் 74.06 லட்சம் பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மெட்ரோ சேவை தொடங்கியதில் இருந்து பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இது தான் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 28ஆம் தேதி மட்டுமே 2 லட்சத்து 95 ஆயிரத்து 509 பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.