முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்!

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்!

சமூக வலைதளம் மூலமாக தமிழகம் முழுவதும் பிரபலமானவர் கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளா. இவர் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஷர்மிளா, அங்குள்ள தனியார் பேருந்து நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லும் வழித்தடத்தில்தான் அவர் பேருந்தை இயக்கி வந்தார். ஒரு பெண்ணாக இருந்து பேருந்தை ஓட்டியதையடுத்து, சமூகவலைதளம் மூலமாக அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டார்.

இதையடுத்து, அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும் அவர் ஓட்டும் பேருந்தில் பயணம் செய்ததோடு, அவருக்கு வாழ்த்துக்களை கூறியும் வந்தனர்.

இதையடுத்து, இன்று காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தை அவர் ஓட்டும்போது, திமுக எம்பி கனிமொழி அந்த பேருந்தில் பயணம் செய்தார். பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்பி தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அப்போது அதே பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்த பெண், கனிமொழி உள்ளிட்டோரிடம் அவர் டிக்கெட் எடுக்கும்படி கூறியதாகவும், அதற்கு ஷர்மிளா, அவர்கள் டிக்கெட் எடுத்துவிட்டதாகவும், அவர்களிடம் டிக்கெட் கேட்க வேண்டம் எனவும் கூறியுள்ளார். இதையடுத்து கனிமொழியும் பீளமேடு பகுதியில் இறங்கி கிளம்பிவிட்டார்.

பின்னர், இச்சம்பவம் குறித்து, நடத்துனர் தனது அலுவலகத்தில் புகார் கூறியுள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்து பேருந்தின் உரிமையாளர், பாப்புலாரிட்டிக்காக நீ ஒவ்வொருத்தரையாக கூட்டி வருகிறாய் என்று ஷர்மிளாவிடம் கோபமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், நான் விளம்பரத்திற்காக யாரையும் கூப்பிடவில்லை என்று ஷர்மிளா கூறியதோடு, கனிமொழி அவர்கள் 23ம் தேதி வரும் விஷயத்தை முன்கூட்டியே தனது பேருந்து மேனேஜரிடம் தான் சொன்னதாகவும் ஷர்மிளா கூற, ஆனால் அவரோ, அதைப்பற்றி தன்னிடம் எதுவும் கூறவே இல்லை என்று அதை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, கோபமடைந்த பேருந்தின் உரிமையாளர் அவரை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியதோடு, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஷர்மிளாவின் வேலை பறிபோன விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com