கோவையில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாய்ந்து சென்று காப்பாற்றிய தெருநாய்கள்!

கோவை துடியலூரில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை தர முயன்ற மதுபோதை சிறுவனை தெருநாய்கள் கடித்துக் குதறி விரட்டியடித்தன.
தெருநாய்கள்
தெருநாய்கள்chatgpt
Updated on

நாம் தினமும் எவ்வளவோ செய்திகளை பார்க்கிறோம். ஆனால் இது மனதை நெகிழ வைத்த நிகழ்வு. நாய்கள் நாம் நடக்கும் போது துரத்துகிறது நம்மை கடிக்க வருகிறது. தெரு நாய்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்கிற வேண்டுகோள் இருக்கும் இந்த காலத்தில் இரு தெரு நாய்கள் பெண்ணின் மானத்தை காப்பாற்றி உள்ள செய்தி படிக்கும் போது மனித நேயம் மனிதரை விட நாய்களுக்கு இருக்கிறது என தெரியவருகிறது.

ஒரு பாதகமான நிகழ்வு நடந்தால் அதை தடுக்காமல் அதை மொபைலில் படம் பிடித்து சோசியல் மீடியாவில் பரப்பி விடும் பழக்கம் கொண்ட மக்களுக்கு இது ஒரு சாட்டையடி.

கோவை துடியலூர் அருகே மதுபோதையில் இருந்த சிறுவன் ஒருவன் மனநலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றபோது, தெருநாய்கள் குறுக்கிட்டுத் தாக்கி அந்த முயற்சியை முறியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனித நேயமும் பாதுகாப்பும் அருகிவரும் சூழலில், வாயில்லாப் பிராணிகள் காட்டிய இந்த வீரம் சோகத்தின் நடுவே ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் அசோகாபுரம் ரயில்வே மேம்பாலம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்.

அப்போது, மதுபோதையில் அப்பகுதிக்கு வந்த 17 வயதுச் சிறுவன் ஒருவன் அப்பெண்ணை அணுகியுள்ளார். அவனிடம் இருந்து தப்ப முடியாத நிலையில் இருந்த அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்க அவன் முயன்றுள்ளான்.

நாய்களின் வீரமான தலையீடு :

சிறுவன் பெண்ணை நெருங்கியபோதே, அங்கே சுற்றித்திரிந்த இரு தெருநாய்கள் அவனைப் பார்த்து தொடர்ந்து குரைக்க தொடங்கின. அவன் நாய்களை விரட்ட முற்பட்ட போதிலும், அவை பின்வாங்கவில்லை. சிறுவன் பெண்ணை தாக்கி பலவந்தப்படுத்த முயன்றபோது, அப்பெண் கூச்சலிட்டார்.

உடனடியாக பாய்ந்து வந்த தெருநாய்கள் அச்சிறுவனை கடித்து குதறின. நாய்களின் தீவிரமான தாக்குதலைத் தாங்க முடியாமல், அச்சிறுவன் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான். தெருநாய்கள் அவனை தூரம் வரை துரத்தி சென்று அப்பெண்ணை பாதுகாத்தன.

stray dog
stray dog

காவல்துறையின் நடவடிக்கை :

அப்பகுதியில் இருந்த கடை ஒன்றுக்கு தீவைக்க முயன்ற வழக்கு தொடர்பான சிசிடிவி (CCTV) காட்சிகளைத் துடியலூர் காவல்துறையினர் ஆய்வு செய்தபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், மதுப்பழக்கத்திற்கு அடிமையான அச்சிறுவனைக் கைது செய்தனர். பின்னர் அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.

சமூக பாடமும் கவலையும் :

இந்தச் சம்பவம் இரு வேறு சிந்தனைகளைச் சமூகத்தின் முன் வைக்கிறது:

* சிறுவர் குற்றங்களும் மதுவும்: இளம் வயதிலேயே சிறுவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாவதும், இரவில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய அச்சுறுத்தலாகும்.

* விலங்குகளின் மனிதநேயம்:

மனிதர்கள் பல நேரம் ஆபத்தைக் கண்டு ஒதுங்கும் சூழலில், தெருநாய்கள் ஆபத்தில் இருந்த ஒரு பெண்ணை காப்பாற்றியது நெகிழ்ச்சியளிக்கிறது.

பெண்கள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரவுக் ரோந்துப் பணிகளைப் பலப்படுத்துவதும், சிறுவர்களிடையே மதுப் பழக்கத்தை தடுப்பதும் அவசியமான ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
கேரளாவில் உள்ள இந்தக் கோவில்களுக்குள் ஆண்கள் நுழைய அனுமதியில்லை!
தெருநாய்கள்
logo
Kalki Online
kalkionline.com