மதுரை மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கை இன்று நடைபெற்றது. மொத்தம் ரூ.1.04 கோடி ரொக்கம் உண்டியலில் வசூலாகியிருப்பது தெரியவந்துள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சங்க காலம் தொட்டு இன்றளவும் மக்கள் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் தலம். உலகப் புகழ்பெற்ற இந்த ஆலயம் தமிழகத்தின் பெருமைமிகு அடையாளம். மதுரையில் மீனாட்சி பிறந்ததால் மீனாட்சி சன்னிதி இந்தக் கோயிலில் முதன்மையாகக் கருதப்படுகிறது. கோயிலைச் சுற்றி நான்கு மாடங்கள் இருப்பதால் நான்மாடக் கூடல் என்ற பெயரும் மதுரைக்கு இருக்கிறது. 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கோயில் கிழக்கு மேற்காக 847 தெற்கு வடக்காக 792 அடியும் கொண்டது.சிவபெருமான் நடனமாடியதாக ஐதீகம் கொண்ட ஐந்து தலங்களில் முக்கியமானது இத்தலம்.
உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மற்றும் அதன் 10 உபகோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.
திருக்கோவில் உண்டியல் எண்ணிக்கையில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்
உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.1,04,37,557, தங்கம் 544 கிராம், வெள்ளி 6 கிலோ 576 கிராம் மற்றும் அயல்நாட்டு நோட்டுக்கள் 465 காணிக்கையாக கிடைத்துள்ளது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.