கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

மிழ்நாட்டின் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், செங்கல்பட்டு, திருப்பூர், சிவகங்கை, தஞ்சை, நாகை, தூத்துக்குடி, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், திண்டுக்கல், மதுரை மாவட்ட கலெக்டர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மாற்றல் விபரம்: கடலூர் கலெக்டராக அருண் தம்புராஜ், புதுக்கோட்டை கலெக்டராக மெர்ஸி ரம்யா, தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், நாமக்கல் கலெக்டராக உமா, காஞ்சிபுரம் கலெக்டராக கலைச்செல்விமோகன், செங்கல்பட்டு கலெக்டராக கமல் கிஷோர், மதுரை மாவட்ட கலெக்டராக சங்கீதா, சிவகங்கை கலெக்டராக ஆஷா அஜீத், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக தீபக் ஜேக்கப், தூத்துக்குடி கலெக்டராக ராகுல்நாத், ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக விஷ்ணு சந்திரன், ஈரோடு மாவட்ட கலெக்டராக ராஜகோபால் சங்கரா, திருப்பூர் மாவட்ட கலெக்டராக கிருஸ்துதாஸ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக பூங்கொடி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டராக சராயு, நாகை மாவட்ட கலெக்டராக ஜான் டாம் வர்கீஸ், அரியலூர் மாவட்ட கலெக்டராக ஆனி மேரி சொர்ணா உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com