இஸ்ரேலுக்கு எதிரான முடிவை எடுத்த கொலம்பியா… என்ன காரணம்?

Gustavo Petro
Columbia President
Published on

இஸ்ரேலின் காசா மீதான போருக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. அந்தவகையில், இப்போது கொலம்பியா அதிபர், இஸ்ரேலுக்கு எதிராக அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார்.

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதலை நடத்தினர். இதனால் கோபமடைந்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று  சபதம் எடுத்தது. இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 6 மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இவர்களின் போரை நிறுத்த கோரி பல உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், இஸ்ரேல் போர் முடிவை கைவிட மறுக்கிறது.

இதற்கிடையே ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானில் உள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பைத் தாக்க இஸ்ரேல், ஈரான் தூதரகத்தைத் தாக்கியது. இதில் ஈரானின் உயர் அதிகாரிகள் உட்பட சிலர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா அமைப்பை தாக்கத்தான் நாங்கள் நினைத்தோம், ஈரானை தாக்க எண்ணவில்லை என்று இஸ்ரேல் மறைமுகமாகக் கூறியும் ஈரான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல், ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு நிதியுதவி உட்பட பல உதவிகளை செய்துவருகிறது. இதனால் ஈரான்- இஸ்ரேல் போரும் தொடங்கியது. அமெரிக்காவிலும் கூட இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், தற்போது இஸ்ரேல் போருக்கு எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் ஒன்றான கொலம்பியா ஒரு முடிவை எடுத்துள்ளது. காசா போருக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேல் நாட்டு உடனான அனைத்து விதமான தூதரக உறவுகளையும் முறித்துக் கொள்வதாகத் தென் அமெரிக்கா நாடான கொலம்பியா அறிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். கொலம்பிய அதிபர் பெட்ரோ, இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் பேசுவது இது முதல்முறை இல்லை. அவர் ஏற்கனவே கடந்த காலங்களிலும் இஸ்ரேலின் நடவடிக்கைகளையும், அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும் கடுமையாக விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்:
வயநாடு: ராகுல் ஜெயிப்பது நிச்சயமா?
Gustavo Petro

இஸ்ரேல் இனப்படுகொலை செய்து வருவதாக தென்னாப்பிரிக்கா தொடர்ந்த வழக்கில், உலக நாடுகள் அவர்களுடன் இணைந்து ஆதரவு தெரிவிக்கும்படியும் கொலம்பியா அதிபர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே சிலி, ஹோண்டுராஸ் உள்ளிட்ட பல நாடுகள், தங்கள் தூதர்களை திருப்பி அழைத்தனர். அந்த வரிசையில் தற்போது கொலம்பியாவும் இணைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com