ராணுவத்தைக் கிண்டல் செய்த காமெடியனுக்கு 16 கோடி ரூபாய் அபராதம்!

ராணுவத்தைக் கிண்டல் செய்த காமெடியனுக்கு 16 கோடி ரூபாய் அபராதம்!
Published on

சீன நாட்டின் பெய்ஜிங்கில் உள்ள ஷாங்காய் சியாகுவோ நிறுவனம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. அந்த நிகழ்ச்சியில் ஸ்டாண்டப் காமெடி செய்யும் காமெடியன் லி ஹாயோஷியின் நிகழ்ச்சியும் இடம் பெற்று இருந்தது. அந்தக் காமெடி நிகழ்ச்சியில் ஹாயோஷி தன்னுடைய நாய்களின் நடத்தையை, ராணுவத்துடன் ஒப்பிட்டு நகைச்சுவையாகப் பேசினார்.

அந்தக் காமெடி பேச்சு சீன ராணுவத்துடன் தொடர்புடைய, அதிபர் ஜி ஜின்பிங் சொன்ன முழக்கத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. அவர் பேசி இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் அரசாங்கம், காமெடியன் லி ஹாயோஷிக்கு எதிரான அறிக்கையை வெளியிட்டது.

இதற்கிடையில், "என்னுடைய பேச்சு, நோக்கம் எல்லாம் அரசை அவமானப்படுத்துவதல்ல. நகைச்சுவைக்காக மட்டுமே அப்படிப் பேசினேன். என்னுடைய அந்தப் பேச்சுக்காக ஆழ்ந்த வருத்தத்தையும், மன்னிப்பையும் கோருகிறேன்" என காமெடியன் லி ஹாயோஷி தெரிவித்து இருந்தார். ஆனாலும், ஸ்டாண்டப் காமெடியன் லி ஹாயோஷி கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதோடு, அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டு உள்ளது.

அதையடுத்து, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஷாங்காய் சியாகுவோ நிறுவனத்துக்கு 2 மில்லியன் (16 கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், சீனாவின் கலாசார அமைச்சகத்தின் பெய்ஜிங் பிரிவு, ‘ராணுவத்துடன் தொடர்புடைய புகழ்பெற்ற முழக்கத்தை அவதூறாகப் பேசுவதற்கு எந்தவொரு நிறுவனம் அல்லது தனிநபர் சீன ராணுவத்தை ஒரு மேடைக்காகப் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" என்று தெரிவித்து இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com