வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு!

வர்த்தக சிலிண்டர்
வர்த்தக சிலிண்டர்

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையினில் தற்போது வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் குறித்த அப்டேட்-ஐ மத்திய எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அரசு எரிவாயு நிறுவனங்கள் அந்த மாத துவக்கத்தில், இறக்குமதி விலை மற்றும் இதர செலவுகளை கணக்கில் எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்து வெளியிடும்.

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் என்பதினை பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

வணிக சிலிண்டர்
வணிக சிலிண்டர்

இந்த விலை உயர்வுகள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப மாற்றம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 கிலோ சமையல் சிலிண்டர் விலை ரூ.1118.50-க்கு விற்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சமையல் சிலிண்டருக்கு ரூ.1200 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

கடந்த மாதங்களில் பிற மாநிலங்களில் நடந்த தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஒரே அளவில் உள்ளது. ஆனால் டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் ரூ.1937-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1945 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் சிறு, சிறு தொழில் செய்வோர், சாலையோரம் கடை நடத்துபவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள்.

வணிக சிலிண்டர் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று உயர்ந்து இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தொழில் செய்வோர் கருதுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com