சென்னை போக்குவரத்து காவல்துறையின் ட்விட்டர் பக்கங்களில் பதிவாகும் புகார்கள்!

போக்குவரத்து  விதிமீறல்
போக்குவரத்து விதிமீறல்

சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்கள் பெறப்படுகின்றன. சென்னை பெருநகர காவல்துறையின் ட்விட்டர் பக்கங்களின் வாயிலாக தினசரி 50 விதிமீறல் புகார்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு போக்குவரத்துக்கு போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களின் நடத்தையை CCTV கேமராக்கள் மற்றும் ANPR கேமராக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் .

சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன. கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் சமூக வலைதள செயலியை உபயோகப்படுத்துவதன் மூலம் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு காவல்துறையின் செயல்பாடுகள் சென்றடைவது எளிதாகியுள்ளது.

இவ்வாறு சமூக வலைதள செயலியை பயன்படுத்தும் சென்னை பெருநகர காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 1,35,927 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது “@chennaipolice” என்ற ஐடி மூலம் இயங்கி வருகிறது மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் ட்விட்டர் பக்கத்தை 75,271 நபர்கள் பின் தொடர்கின்றனர். இச்செயலியானது “@ChennaiTraffic” என்ற ஐடி வாயிலாக இயங்கி வருகிறது.

இதன் மூலம் சுமார் 16,000 நபர்கள் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையுடன் தொடர்பு கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com