மதுரை எய்ம்ஸ் மருத்துவனைக்கான காம்பவுண்ட் சுவர் 95% நிறைவேற்றம்!

மதுரை எய்ம்ஸ்
மதுரை எய்ம்ஸ்
Published on

மதுரை எய்ம்ஸ் மருத்துவனைக்கான காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி 95% நிறைவு பெற்றுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் ஏன் தாமதமாக நடைபெற்று வருகிறது? அதற்கான காரணங்கள் என்ன? என பலரும் கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது. ஆளும் திமுக அரசு கூட பல்வேறு மேடைகளில் இது குறித்து கேள்வி எழுப்பி வந்தது. அதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு மேடையில் காட்டிய எய்ம்ஸ் செங்கல் மிகவும் பிரபலமானது.

மாநிலங்களவையில் உறுப்பினர் வைகோ மதுரையில் எய்ம்ஸ் நிலம் ஒப்படைக்கப் பட்ட பிறகும் தாமதம் அடைவதற்கான காரணங்கள் குறித்தும் முழுமையான வளாகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும்? என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2020ம் ஆண்டு நிலங்கள் ஒப்படைக்கப் பட்டது. அதன்படி 95% தொடக்கப்பணிகள் குறிப்பாக காம்பவுண்ட் சுவர் உள்ளிட்டவை கட்டும் பணிகள் முடிவடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கான கூடுதல் திட்ட பணிகள் சேர்க்கப்பட்டதால் கூடுதல் அவகாசம் எடுத்துக் கொண்டதாகவும், ஆனால் வளாகம் கட்டமைக்க மாஸ்டர் பிளான், திட்டமிடல் பணிகள், உபகரணங்கள் தேவை உள்ளிட்டவை குறித்து முழுமையான அறிக்கையை தயார் செய்யப்பட்டதற்கு பின்னர் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கி அதன்படி 2021 மார்ச் 26ம் தேதி இந்தியா ஜப்பான் இடையே கையெழுத்து ஒப்பந்தம் நடைபெற்றது.

திட்ட மதிப்பு முதலில் 1,264 கோடி என மதிப்பீடு செய்யப்பட்ட நிலையில் மாற்றியமைக்க பட்ட மதிப்பீடாக 1,977.8 கோடி ரூபாய் எனவும், கடன் ஒப்பந்தத்தின் படி 5 வருடம் 8 மாதங்களுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டக்கூடிய பணிகள் முடிவடைய வேண்டும். அதன்படி 2026 அக்டோபர் மாதத்திற்குள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முடிக்கப்பட வேண்டும். ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனையின் கீழ் 50 மாணவர்கள் பயில்வதற்கான கல்வி தொடங்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வ விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com