திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம்! ஸ்டாலின் ட்வீட்!

திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள்  பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம்! ஸ்டாலின் ட்வீட்!
Published on

திமுக தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டதிருக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினர் கடந்த 14ம் தேதி கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜியின் கைதை கண்டித்து கோவையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர். இக்கூட்டத்துக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி தலைமை வகித்தார். இதில், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கே.எம்.காதர்மொகிதீன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி. இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்யும்.

வரும் பொதுத்தேர்தலில் தோல்வி உறுதியாகிவிட்டதை பா.ஜ.க. உணர்ந்துவிட்டது. எதிர்க்கட்சியினரை அரசியல் ரீதியாக எதிர்ப்பதற்குப் பதிலாக, தங்களுடைய தோல்விகளை மறைக்கக் கோழைத்தனமான, திமிர்தனமான நடவடிக்கைகளில் பா.ஜ.க. இறங்கியுள்ளது. இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com