அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-சீனா இடையே மோதல்! பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

India china
India china
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-சீனா இடையே மோதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை செய்து வருகிறார்.

இந்தியா-சீனா இடையே தொடர்ந்து எல்லைப் பிரச்சினை என்பது அடிக்கடி இருந்து வருகிறது. தற்போது அருணாச்சல பிரதேசத்தில் இந்திய மற்றும் சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக முப்படை தளபதி அனில் சுவுகான் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வீரர்கள் தாக்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீட்டிலேயே இந்த ஆலோசனை நடைபெற்றது.

அருணாச்சல பிரதேசம் மாநிலம் தவாங் எல்லைப் பகுதியில் கடந்த 9-ம் தேதி 300-க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தனர். அப்போது, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் காயம் ஏற்பட்டது. குறிப்பாக இந்திய ராணுவத்தினரை விட சீன ராணுவத்தினரே அதிகளவு காயமடைந்ததாக தகவல் வெளியானது.

India china
India china

இதனிடையே எல்லை மோதல் தொடர்பா விவாதம் நடத்தக் கோரி, சிவசேனா மற்றும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது சீன எல்லையில் இந்திய வீரர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com