கமலாலயத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்!

கமலாலயத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்!
Published on

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சியினர் சென்னை தி.நகரில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

பிரதமர் மோடி குறித்து சர்ச்சையாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடர்ந்த நிலையில் அவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம், மேலும் ராகுல் காந்தி எம்பி பதவியும் நீக்கப்பட்டது இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ராகுல்காந்தி தகுதி நீக்க நடவடிக்கையை தொடர்ந்து ராகுல்காந்தி டெல்லியில் வசிக்கும் அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு பதில் அளிக்கும் விதமாக ராகுல்காந்தி பதில் கடிதம் எழுதினார். பின்னர் விதிமுறைக்குட்பட்டு வீட்டினை காலி செய்வதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் கருப்பு உடை அணிந்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தினர்.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்பகுதியில் பரபரப்பு நிலவியதால் போராட்டம் நடத்தியவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com