

தமிழக சட்டசபை தேர்தலில் 28 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி, தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் இதனை வெளியிட்டார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
காலியான 3 லட்சம் அரசு பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை.
காவல்துறையி்ல 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்
பிஎம் கிஷான் நிதியுதவியில் இருந்து விலக்கப்பட்ட நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
டியூஷன் அக்கா திட்டம் செயல்படுத்தப்படும்
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் பென்சன் கிடைக்க நடவடிக்கை
6 மண்டலங்களிலும் தனிச் சிறப்பு பள்ளிகள் உருவாக்கப்படும்.
தமிழகம் ஆன்மிக சுற்றுலா நகராக மாற்றப்படும்.
தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மன நல மருத்துவமனைகள்
2030க்குள் ரேபிஸ் மரணங்கள் இல்லா தமிழகம் உருவாக்கப்படும்.நாய்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி, கருத்தடை
மனநல முதலுதவி செய்ய 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி.
அரசு பள்ளிகளில் ஏஐ தொழில்நுட்ப உதவியோடு கற்றல். இதற்காக ஆசிரியர்களுக்கு ஏஐ பயிற்சி
விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவைகளுக்காக வாரியம்
ஆரம்ப சுகாதார மைய வலயைமைப்பு பலப்படுத்தப்படும்
பாசனக் கால்வாய்கள் மீட்டெடுக்கப்பட்டு நவீனமயமாக்கப்படும்
இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்
முக்கிய நகரங்களில் 24 மணி நேரமும் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை.
குறைந்த விலையில் வீடுகள், விரைவான நிலப்பட்டா வழங்கப்படும்
என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here