பா.ஜ.க-வில் சேர்ந்த காங்கிரஸின் மோகன்சிங் ரத்வா! சூடுபிடிக்கும் குஜராத் தேர்தல் களம்!

மோகன்சிங் ரத்வா
மோகன்சிங் ரத்வா

பிரதமர் நரேந்திர மோடியும் செய்த பணிகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதனால் நான் பா.ஜ.க-வில் சேர முடிவு செய்தேன்" என குஜராத் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் மோகன்சிங் ரத்வா. காங்கிரஸில் இதுவரை 10 முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர தான் மோகன்சிங் ரத்வா, திடீரென கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர முடிவுசெய்திருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது

குஜராத் தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே இருக்கும் நிலையில் இது காங்கிரஸாரிடையே பேருத்த சலசலப்பை உண்டாக்கியுள்ளது. உதய்பூர் மாவட்டத்திலுள்ள பாவி ஜெட்பூர் ரிசர்வ் தொகுதி எம்.எல்.ஏ-வான 78 வயதான மோகன்சிங் ரத்வா அங்குள்ள பழங்குடியினர் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இந்தமுறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என முன்னதாகவே கூறியிருந்த மோகன்சிங் ரத்வா, தனது தொகுதியில் தன்னுடைய மகன் ராஜேந்திரசிங் போட்டியிட விரும்புவதாகக் கூறியிருந்தார்.

Modi- Amithsha
Modi- Amithsha

குஜராத்தில் தொடர்ச்சியாக 27 ஆண்டுகளாக பா.ஜ.க மட்டுமே ஆட்சி செய்துவருகிறது. இதனால், தற்போது காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரண்டு கட்சிகளும் குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முனைப்புக்காட்டி வருகின்றன. அதனால் ஆம் ஆத்மி கூட புதிய முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் இசுதன் கத்வியை தேர்வு செய்துள்ளது. இந்நிலையில் தான் மோகன்சிங் ரத்வா, திடீரென கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் சேர முடிவுசெய்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன்சிங் ரத்வா, ``எனக்கு இப்போது வயதாகிவிட்டது. என் மகன் ராஜேந்திரசிங் ஒரு பொறியாளர். அவனுக்கு நாங்கள் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது" எனத் தெரிவித்தார்.

prime minister narendra modi
prime minister narendra modi

மேலும், தன் மகனுக்கு சீட் கொடுக்காததால்தான் காங்கிரஸிலிருந்து விலகினார் என்பதை கேள்வியினை மறுத்த மோகன்சிங் ரத்வா, ``என் மகனுக்கு சீட்டு கொடுக்க மாட்டோம் என்று காங்கிரஸ் ஒரு போதும் கூறவில்லை. காங்கிரஸ் எதையும் கூறுவதற்கு முன்பே நான் முடிவு செய்தேன். மேலும், நமது பழங்குடியினப் பகுதிகளில் பா.ஜ.க அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் செய்த பணிகளால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். அதனால் நான் பா.ஜ.க-வில் சேர முடிவு செய்தேன்" என கூறியுள்ளார் மோகன்சிங் ரத்வா. இது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம் , எனினும் குஜராத் தேர்தல் அரசியல் களம் இனி சூடுபிடிக்கும் என அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர் .

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com