ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதியை ஒதுக்கிய காங்கிரஸ் கட்சி!

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி

தேர்தலில் போட்டியிடும் பட்டியல் அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிருப்தி வேட்பாளர்கள் பலர் பாஜகவில் இருந்து தொடர்ந்து விலகி வருகின்றனர். பரபரப்பான கர்நாடக சட்டமன்ற தேர்தல் களம் தற்போது சூடு பிடித்து வருகிறது.

நேற்று காங்கிரஸ் வெளியிட்ட 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, அவர் பலமுறை வென்ற ஹூப்ளி தார்வாட் மத்திய தொகுதியையே, காங்கிரஸ் கட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.

கர்நாடக முன்னாள் முதலமைச்சராகவும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் துணை முதலமைச்சராக இருந்த ஈஸ்வரப்பா, லட்சுமண் சாவடி என தொடர்ந்து பாஜகவின் பலமாக இருந்த பல பேர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியிலிருந்து விலகினர். மேலும் எதிர்க்கட்சியான காங்கிரஸில் ஐக்கியமாகினர்.

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர்களை அறிவித்தனர். இந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்கள் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு, பாஜக தலைமை மீண்டும் சீட் வழங்கவில்லை என்று பலர் அதிருப்தி அடைந்துள்ளது அரசியலில் பரபரப்பாகி வருகிறது.

நேற்று 4ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட கர்நாடக காங்கிரஸ் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி தார்வாட் தொகுதி ஒதுக்கியது அரசியல் களத்தில் பரபரப்பாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com