அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் போட்டியிடப் போவதாக ஏற்கனவேஅறிவித்தார். இதையடுத்து ராஜஸ்தான மாநில முதல்வர் பதவிக்கு காங்கிரஸின் மூத்த தலைவர் சச்சின் பைலட் பெயர் பரிந்துரைக்கப் பட்டது.
இதனை எதிர்த்து, அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 92 பேர், பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக காங்கிரஸ் தலைமைக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இதனால், ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் நேற்று கட்சி தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அசோக் கெலாட் கூறியதாவது;
நான் காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து விலகுகிறேன். இதனால் ஏற்பட்ட அரசியல் சச்சரவுகளுக்கு சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்பதற்காகவே இன்று இங்கு வந்தேன்.
-இவ்வாறு அவர் தெரிவித்தார்.