தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் !

காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி
Published on

கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள முதற்கட்டமாக 124 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு பட்டியலை வெளியிட்டு காங்கிரஸ் கட்சி பரபரப்பினை கிளப்பியுள்ளது.

கர்நாடகத்தில் மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிப்பதற்கு குறைந்தது 113 இடங்களை பெற வேண்டும். கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 104 தொகுதிகளிலும் காங்கிரஸ் 80 தொகுதிகளிலும் மதச் சார்பற்ற ஜனதாதளம் 37 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன

கர்நாடக மாநில தேர்தல் மே மாதம் முதல் வாரத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 நிவாரணம், வேலையில்லா டிப்ளமோ படித்த நபர்களுக்கு மாதம் ரூ.1,500 நிவாரணம், காலிப் பணியிடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் 10 கிலோ இலவச அரிசி என அறிவித்துள்ளது.

தற்போது கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் படி 124 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்டது. இப்பட்டியலில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களான தினேஷ் குண்டுராவ் காந்திநகர் தொகுதியிலும், டி.கே.சிவக்குமார் கனகபூரா தொகுதியிலும் முன்னாள் முதல்வர் சித்தராமையா வருணா தொகுதியிலும் மற்றும் மல்லிகார்ஜுனா கார்கேவின் மகனான பிரியங் கார்கே சித்தாப்பூர் ரிசர்வ்டு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com