அரசியலமைப்பை காக்க ஒரே எண்ணம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கைகோர்க்கும்: சோனியா காந்தி!

அரசியலமைப்பை காக்க ஒரே எண்ணம் கொண்ட அனைத்து அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கைகோர்க்கும்: சோனியா காந்தி!
Published on

பல முக்கிய மாநிலங்களில் தேர்தல் நெருங்கி வருவதால், “ஒவ்வொரு அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும்” நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயல்பாடுகளை, முனைப்புடன் தனது கட்சி (காங்கிரஸ்) நேரடியாக மக்களிடம் கொண்டு செல்லும் என்றும், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க ஒத்த கருத்துள்ள அனைத்துக் கட்சிகளுடன் கைகோர்க்கும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த கருத்துப் பகிர்வில், சோனியா காந்தி, பிரதமர் மோடியும் அவரது அரசாங்கமும் நீதித்துறையை "திட்டமிட்டு சிதைத்துவிட்டதாக" குற்றம் சாட்டினார், அவர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே ஜனநாயகத்தின் மீது "ஆழ்ந்த வேரூன்றிய அவமதிப்பை" காட்டுவதாகக் கூறினார்.

பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களால் தூண்டப்பட்ட வெறுப்பு மற்றும் வன்முறையின் அலைகளை பிரதமர் "அறிந்தே புறக்கணிக்கிறார்" என்றும் அவர் குற்றம் சாட்டினார், மேலும் அவர் ஒருமுறை கூட அமைதி அல்லது நல்லிணக்கத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை என்பதோடு குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தவும் இல்லை என்றார் அவர்.

“மதப் பண்டிகைகள் மற்றவர்களை மிரட்டுவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகக் கருதுகிறது பாஜக அரசு - அவை மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான சந்தர்ப்பங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. மாறாக, அவர்களின் மதம், உணவு, ஜாதி, பாலினம் அல்லது மொழியின் காரணமாக மட்டுமே அச்சுறுத்தல் மற்றும் பாகுபாடு உள்ளது” என்று காந்தி கூறினார்.

இவ்விதமாக மோடி மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்த சோனியா காந்தி, மோடியின் அறிக்கைகள் அன்றைய தினத்தின் மிக முக்கியமான பிரச்சினைகளைப் புறக்கணிக்கின்றன அல்லது அந்த விஷயங்களில் இருந்து திசைதிருப்ப "ப்ளாடிட்யூட் மற்றும் வாய்மொழி ஜிம்னாஸ்டிக்ஸ்" வகையினதாக பிரச்சனையில் இருந்து திசை திருப்பும் விதமாகவே இருக்கின்றன என்றும் குற்றம் சாட்டினார்.

மக்களை திசை திருப்பும் விஷயத்தில் பிரதமரின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், இனியும் நாட்டு மக்கள் அமைதியாகவே இருக்க முடியாது என்று கூறிய சோனியா காந்தி, அடுத்த சில மாதங்கள் இந்திய ஜனநாயகத்தின் முக்கியமான பரீட்சைக்காலம் என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்,ஏனெனில், பல முக்கிய மாநிலங்களில் தேர்தல்கள் நெருங்கி வருவதால் மோடி அரசாங்கம் "ஒவ்வொரு அதிகாரத்தையும் துஷ்பிரயோகம்" செய்வதில் பெரும் முனைப்புடன்

ஈடுபடும். அதை முறியடிக்க..."பாரத் ஜோடோ யாத்திரையில் செய்தது போல், காங்கிரஸ் கட்சி தனது செய்தியை நேரடியாக மக்களிடம் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளையும் எடுக்கும், மேலும் இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் கொள்கைகளை பாதுகாக்க ஒத்த எண்ணம் கொண்ட அனைத்து கட்சிகளுடன் கைகோர்க்கும்" என்று சோனியா காந்தி வலியுறுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com