மனுஷங்க செஞ்ச வேலையாம் இது?! அடக் கொடுமையே!

அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப்
அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப்
Published on

கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சீனாவில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய  அமெரிக்க விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் ன்பவர் தான் எழுதிய புதிய புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ ஹப் என்பவர் கொரோனா காலகட்டத்துக்கு முன்பு சீனாவிலுள்ள வூஹான் வைராலஜி ஆய்வு மையத்தில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ''வூஹானைப் பற்றிய உண்மைகள் (தி ட்ரூத் அபவுட் வூஹான்)'' என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டு, வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியேறியது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் தன் புத்தகத்தில் ஆண்ட்ரூ ஹப் கூறியதாவது:

வெளிநாட்டு ஆய்வகங்களில் சரியான உயிரியல் பாதுகாப்பு, இடர் மேலாண்மை ஆகியவை இல்லை. அதனால்தான் வூஹான் ஆய்வகத்திலிருந்து 2 ஆண்டுகளுக்கு கொரோனா வைரஸ் கசிந்து, உலகையே பெரும் நாசத்துக்கு உள்ளாக்கியது.

இந்த ஆய்வகத்தில் பல்லாண்டுகளாக வவ்வால்களில் பல வகையான கொரோனா வைரஸ்களை ஆய்வு செய்து வருகிறது. ஆபத்தான இதுபோன்ற உயிரி தொழில்நுட்பத்தை சீனர்களுக்கு வழங்கியதே அமெரிக்காதான். அந்த வகையில் கொரோனா பேரழிவுக்கு அமெரிக்காவும் மறைமுகக் காரணமாகி விட்டது.

 -இவ்வாறு அவர் தன் புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com