#BIG NEWS : மகளிர் இட ஒதுக்கீடு மசோதா எதிர்ப்புகளுக்கு இடையே அறிமுகம்..!!

Constitution Amendment Bill
Constitution Amendment Bill SOURCE:HINDU
Published on

மத்திய அரசின் தொகுதி வரையறை மசோதாவிற்கு தமிழ்நாட்டின் முதல்வர் தனது வலுவான எதிர்ப்பை ஆரம்பம் முதலே தெரிவித்து வருகிறார். இன்று கருப்பு கொடி ஏற்றியும் தனது உரைகள் மூலமும் மேலும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

ஸ்டாலினுடன் இணைந்து பல மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் 33 சதவீதம் பெண்கள் இட ஒதுக்கீடு அரசியல் சாசன அமர்வு திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.

முன்னதாக மகளிர் இட ஒதுக்கீடு திருத்த மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் தாக்கல் செய்தார். தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு திமுக எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்று,எதிர்க்கட்சிகள் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தது.

திருத்தப்பட்ட பெண்கள் ஒதுக்கீடு அரசியல் சாசன மசோதா அறிமுகத்திற்கு எம்பிக்கள் 207 பேர் ஆதரவு அளித்த நிலையில் 126 பேர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா அறிமுகத்திற்கு 126 எம்பிக்கள் வாக்களித்து ஆதரவு தந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் இட ஒதுக்கீடு அரசியல் சாசன அமர்வு திருத்த மசோதா நாடாளுமன்ற அவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் எம்பிக்கள் எண்ணிக்கையும் 850 ஆக உயர்வது உறுதியாகியுள்ளது.

எம்பிக்கள் வாக்கெடுப்புக்கு பின் மக்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, தொகுதி மறு வரையறை மற்றும் யூனியன் பிரதேச மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று மசோதாக்கள் சார்பாக நாளை மாலை 4 மணி வரை விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com