நியாய விலைக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சுற்றறிக்கை!

நியாய விலைக் கடைகளுக்கு நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சுற்றறிக்கை!
Published on

தமிழ்நாடு முழுவதும் அரிசி அட்டை, சர்க்கரை அட்டை என சுமார் 1,96,16,093 ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 33,222 நியாய விலைக் கடைகள் செயல் பட்டு வருகின்றன. அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இவற்றின் மூலம் விற்பனை செய்யப் படுகின்றன.

இந்த நிலையில் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப் பட்டுள்ளது.

அதில், “நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் வேட்டி, சேலைகள் POS இயந்திரம் மூலம் மட்டுமே வழங்கப் பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் இருப்பு வைத்துக் கொண்டு விநியோகிக்காமல் இருத்தல் கூடாது. சரியாக 9 மணிக்கு நியாய விலை கடைகளை திறந்து பொருட்கள் விநியோகம் செய்வதை வட்ட வழங்கல் அலுவலர்கள், தனி வருவாய் ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

திறக்கப்படாத கடைகள் குறித்து சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்படும் எனவும், ஒரே நபர் வெளி மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் குடும்ப அட்டை வைத்து பொருட்கள் பெற்று வருவது குறித்து கள விசாரணை செய்து அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், இந்திய குடிமகனாக இல்லாத எவருக்கும் புதிய குடும்ப அட்டை வழங்க கூடாது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது தொடர்பாக உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com