கொழுப்பு அமில உணவுகளே இதய நோயை ஏற்படுத்துகின்றன: நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

கொழுப்பு அமில உணவுகளே இதய நோயை ஏற்படுத்துகின்றன: நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!
Published on

‘கொழுப்பு அமில உணவுகளை அதிகம் உட்கொள்வதால் அதிக அளவிலான உயிரிழப்பு மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன’ என்று  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டபியா நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் இதய நோய் அதிகரித்து வருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா எழுத்து பூர்வமாக அளித்துள்ள பதிலில், ‘‘டிசான்ஸ் ஃபேட்டி ஆசிட்’ என்னும் நிறைவுறை கொழுப்பு அமிலங்களே அதிக அளவிலான இறப்புக்குக் காரணமாக இருக்கிறது. இந்தக் கொழுப்பு அமிலங்கள் உணவுப் பொருள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. நிறைவுறை கொழுப்பு அமிலம் இதய நோய் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கிறது. இந்த வகை அமிலங்கள் பேக் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் பேக்கரி மற்றும் பீட்சா, பர்கர் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. சமையல் எண்ணெய்களிலும் இந்த அமிலங்கள் அதிகம் காணப்படுகின்றன.

இந்த வகை கொழுப்பு அமிலங்களே ஆண்டுக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிர் இழப்புக்குக் காரணமாக இருக்கிறது.  இந்த வகை அமிலத்தின் மூலம் இதய நோய் ஏற்பட்டு 28 சதவீதம் பேரும், மற்ற வகை நோய்கள் ஏற்பட்டு 34 சதவீதம் பேரும் மரணிப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வகை அமிலங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதாலும், மாற்றப்பட்ட விளைவின் காரணமாகவும் மரணங்கள் அதிகரிக்கின்றன. தேசிய சுகாதார அமைப்பு கூற்றின்படி 4.6 சதவீதம் பேர் கரோனரி இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவற்றுக்கும் இந்த வகை கொழுப்பு அமிலங்களே காரணமாக இருக்கின்றன.

இந்த வகை கொழுப்பு அமிலங்கள் ஆபத்தானவையாக இருப்பதைக் கண்டறிந்து 2022ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி உணவு சட்ட திருத்த மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் இந்த வகை கொழுப்பு அமிலங்களை உணவுப் பொருட்களில் 2 சதவீதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதை மீறும் உணவு உற்பத்தி நிறுவனங்கள் மீதும் உணவகங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது” என்றும் அந்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com