அசாமில் தொடர்ந்து நீடிக்கும் கனமழை! 30 ஆயிரம் பேர் பாதிப்பு!

அசாமில் தொடர்ந்து நீடிக்கும் கனமழை! 30 ஆயிரம்  பேர் பாதிப்பு!

அசாமில் எங்கும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சிராங், தராங், தெமாஜி, துப்ரி, திப்ருகார், கோக்ராஜ்ஹார், லகிம்புர், சோனிட்புர், உதால்கிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, 25 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன, மேலும், மாநிலம் முழுவதும் 215.57 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. லக்கிம்பூர், கோல்பரா, பிஸ்வநாத், தேமாஜி, பக்சா, திமா ஹசாவ் மற்றும் கரீம்கஞ்ச் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் சாலைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன

அசாமில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றில் இருந்து இன்று வரை ரெட் அலார்ட், அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஆரஞ்ச் அலார்ட், அதன்பின் வியாழக்கிழமை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அடுத்த ஐந்து நாட்களில் கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

லகிம்புர் மாவட்டம்தான் மழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு 22 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்னர். திப்ருகார் மாவட்டத்தில் 3800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் 25 இடங்களில் நிவாரம் வழங்கும் மையத்தை தொடங்கியுள்ளனர்.

ஆனால், தற்போது வரை நிவாரண முகாம் திறக்கப்படவில்லை. கம்புரில் பிரம்மபுத்திராவின் கிளை நதியான கோபிலி அணையில் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com