தமிழகத்தில் தொடரும் ஐ.டி ரெய்டு!

தமிழகத்தில் தொடரும் ஐ.டி ரெய்டு!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வருமான வரித்துறையினரின் சோதனை, இன்று முதல் இன்னும் பல இடங்களில் ஆரம்பமாகியுள்ளது. சென்னையில் இன்று காலை ஒவோன் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் ரெய்டு தொடங்கியிருக்கிறது.

ஒவோன் நிறுவனம் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தை ஒவோன் நிறுவனம் பெற்றிருந்தாகவும் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சைக்கிளின் விலை அதிகமாக குறிக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒவோன் நிறுவனத்தின் சைக்கிள் ஒப்பந்ததரார் சுந்தர பரிபூரணம் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனை ஆரம்பமாகியிருக்கிறது. இதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் சைக்கிள் வழங்கும் ஒப்பந்தத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பது தெரிய வரும். ஒவோன் நிறுவனம் தி.மு.க ஆட்சியில் மட்டுமல்ல கடந்த அ.தி.மு.க ஆட்சிகளிலும் இலவச சைக்கிள் வழங்குவதற்காக ஒப்பந்தத்தை பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதே போன்று இன்று கரூர் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமாருக்கு சொந்தமான அபெக்ஸ் நிறுவன அலுவலகத்தில் வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட அலுவலகம் செந்தில் பாலாஜியின் அலுவலகமாகவும் செயல்பட்டு வந்ததாக கரூரிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அசோக்குமாரின் அலுவலகத்துக்கு 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் வருகை தந்துள்ளதாகவும், பூட்டியிருந்த அலுவலக கதவுகள் திறக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே அசோக்குமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேரில் ஆஜராக கால அவகாசம் கேட்டு அசோக்குமார் தரப்பிலும் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது,

கடந்த ஒரு வாரமாகவே தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாக் துறைகளைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். கரூர் பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனையால் பெரும் பரபரப்பு ஏற்பபட்டிருக்கிறது.

வருமான வரித்துறையின் சோதனைகளின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னெவென்று தெரியவில்லை. நான்கு நாட்கள் நடைபெற்ற சோதனையில் கிடைக்கப்பெற்றவை பற்றியும் உறுதியான செய்திகள் இல்லை. இந்நிலையில்

அடுத்து யார் வீட்டில், எப்போது ரெய்டு நடக்குமோ எனறு கரூர் வட்டாரம் கலவரத்தில் இருக்கிறது என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com