சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று குறைவு! வணிகர்கள் மகிழ்ச்சி!

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று குறைவு! வணிகர்கள் மகிழ்ச்சி!
Published on

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சற்று குறைந்துள்ளதால் வணிக பயன்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 76 குறைந்து ரூ.2,192.50-க்கு விற்பனை ஆகிறது.

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

தற்போது 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் 2192.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த மாதம் அதிரடியாக 351 ரூபாய் உயர்ந்த நிலையில், தற்போது குறைந்துள்ளது வணிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதற்கு முன்பு 19 கிலோ எடை கொண்ட இந்த வர்த்தக சமையல் எரிவாயு சிலிண்டர் இதுவரை ரூ.2,268-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

தேசிய தலைநகரான டெல்லியை பொறுத்த அளவில் 19 கிலே எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.91.50 குறைந்துள்ளது. இதன் காரணமாக 19 கிலே சிலிண்டர் ரூ.2,028க்கு விற்பனையாகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே கேஸ் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.. அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை 6ம் தேதி முதல் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com